For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியை படிக்கச் சொல்லுங்க.. ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது.. மத்திய அரசு

இந்தி மொழி கற்பித்தலை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தி மொழி கற்பிப்பதை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு அமைந்தது முதல் இந்தி மொழியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 Encourage states to teach Hindi voluntarily: HRD advisory panel

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியிலும் ஊர் பெயர் எழுதப்பட்டது. இது இந்தியை தமிழ்நாட்டில் திணிக்கும் முயற்சி என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இந்தி தாய் மொழி அல்லாத மாநில அரசுகள் மீது திணிக்க முயற்சித்து வருவதாக பல்வேறு கோணங்களில் இருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தலைமையில் இந்தி ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தி மொழி கற்பிப்பதை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

முன்னதாக, சி.பி.எஸ்.இ.-ன் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் கேந்திர வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு கடந்த மாதம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்தி பேசாத மாநிலங்களின் விமர்சனங்களுக்கு ஆளானது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் பாஜகவின் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.டெல்லி: இந்தி மொழி கற்பிப்பதை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

English summary
The meeting, chaired by Minister of State for HRD Mahendra Nath Pandey, deliberated upon various ways to ensure progressive use of the language.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X