For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்றுத்தாருங்கள் - மோடிக்கு முதல்வர் மீண்டும் கடிதம்

தமிழக அரசின் 2 நீட் மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்றுத்தரவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்ககோரி கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு இந்த சட்டமசோதா கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

EPS urges Modi - Expedite Presidential assent for two NEET Bills

இருப்பினும் தற்போது வரை தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் இந்த விவகாரத்தில் திட்டவட்டமாக உள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் குழப்பமான சூழலில் உள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் தமது கடிதத்தில், தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை தொடர வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வால் 98 சதவீதம் மாணவர்கள் பாதிப்படைவார்கள்.

மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மசோதாவிற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற்று வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை தவிர்ப்பது குறித்து பிரதமர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்விலிருந்து விலக்களிக்க மாநில அரசு சட்டம் இயற்ற நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

English summary
Chief Minister Edappadi K Palaniswami on wednesday requested Prime Minister Narendra Modi to expedite the process for getting Presidential assent for the two Bills unanimously passed by Tamil Nadu Assembly to exclude the State from NEET examination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X