For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோடு அருகே டெங்குக் காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி- வீடியோ

ஈரோடு கவுந்தம்பாடியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படிருந்த 5 வயது சிறுவன் மௌலி உயிரிழந்துள்ளான்.

By Suganthi
Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியில் டெங்குக் காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியில் செந்தில் என்பவரது 5 வயது மகன் மௌலி. இவருக்கு கடந்த ஒரு வாரமாகக் காய்ச்சல் இருந்துள்ளது. அதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனிகளில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.

 In Erode school going boy died in dengue fever

அதன்பிறகு ரத்தப்பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுவனுக்கு டெங்குக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் மௌலி உயிரிழந்துள்ளான்.

மேலும், இப்பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கபப்ட்டுள்ளனர். இவர்களுக்கும் டெங்கு இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் இருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்குக் காய்யச்சலுக்கு 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் அரசு டெங்குவை ஒழிக்க வலுவன நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In Erode Kavundhampadi village, 5 year old boy died in dengue fever. And he had been suffering in fever for a week and several people suffering from fever in that region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X