ஒவ்வொரு தமிழரும் மகிழ்ச்சி கொள்ளும் தருணம்: புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து வேல்முருகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டிருப்பதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

EU Court removes ban on LTTE , welcomes Velmurugan

2009க்கு பிறகு எந்த விதமான பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாததால் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் இந்த தீர்ப்பளித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு தமிழரும் மகிழ்ச்சி கொள்ளவேண்டிய தருணம் இது என தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் அமைப்பு போராளிகள் இயக்கம் தான் என்றும் அது ஒன்றும் பயங்கரவாத அமைப்பு கிடையாது என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
TVK leader Velmurugan has welcomed the decision of the European Union Court to remove the ban on the LTTE. He said every Tamils should be happy to for this. Velmurugan said that the LTTE's organization is not a terrorist organization.
Please Wait while comments are loading...