For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜேந்திர பாலாஜி அமைச்சரா அல்லது எதிர்க்கட்சித் தலைவரா? பிராண்டிய ஈவிகேஎஸ் இளங்கோவன்!

கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிகக்கை எடுக்காமல் இருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனத் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

ஈரோடு: ராஜேந்திர பாலாஜி அமைச்சரா அல்லது எதிர்க்கட்சித் தலைவரா என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சாடியுள்ளார். கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் முன்னால் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தனியார் பால் நிறுவனங்கள் மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

EVKS Elangovan is asking that Rajendra balaji is a minister or a opponent leader?

அதற்கு பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ராஜேந்திர பாலாஜி அமைச்சரா அல்லது எதிர்க்கட்சித் தலைவரா என நக்கலடித்தார். எதிர்க்கட்சி தலைவர்களை போல் குற்றம்சாட்டி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் என்றும் அவர் கூறினார்.

அமைச்சராக இருந்து கொண்டு கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமால் ஏன் குற்றம்சாட்டி வருகின்றார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கடந்த 3 நாட்களாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
EVKS Ilangovan is asking that Rajendra balaji is a minister or an opponent leader? Why he didnt take any action on the private milk companies He asked.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X