கொல்லப்பட்டது சுவாதி கொலையாளி மணி இல்லை.. பிரான்ஸ் தமிழச்சி மறுப்பு

சென்னை: சுவாதியைக் கொன்றவர்களில் ஒருவரான மணியும் படுகொலை செய்யப்பட்டு விட்டதாக பிரான்ஸ் தமிழச்சி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். ஆனால் அது தவறான பதிவு என விளக்கம் அளித்துள்ளார் பிரான்ஸ் தமிழச்சி.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஞாயிறன்று தற்கொலை செய்து கொண்டார்.

Facebook Tamizachi's new post on Swathi murder case

இந்நிலையில் சுவாதி கொலையாளிகளில் ஒருவரான மணி என்பவர் படுகொலை செய்யப்பட்டு விட்டதாக பிரான்ஸ் தமிழச்சி கூறியிருந்தார். ஆனால் அது தவறான தகவல் என மறுத்துள்ளார்.

Facebook Tamizachi's new post on Swathi murder case

முன்னதாக இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

சுவாதி படுகொலை வழக்கு விசாரணையில் இருந்த ராம்குமார் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட அன்று சுவாதியை கொன்றவர்களில் ஒருவரான 'மணி' என்பவர் குறித்த தகவல்கள் எழுதி இருந்தேன். அவர் கூடிய விரைவில் கொல்லப்படுவார் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

Facebook Tamizachi's new post on Swathi murder case

அதேப்போல் இன்று காலை அவர் கொல்லப்பட்டிருக்கிறார். உடல் அடையாளம் தெரியவில்லை என்கிறார்கள். ஆனால் தலை மொட்டையாக இருந்தால் நிச்சயம் மணி தான்.

இத்தகவல் நான் எழுதிய உடன் ஒரு பத்திரிக்கையார் அச்செய்தி உண்மைதானா என்று புலன் விசாரணை செய்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். தன் மகனை குறித்து அவதூறு பதிவு போட்டதற்காக தமிழச்சி மீது போலிசில் புகார் அளிக்கப் போகிறேன் என்று பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் இன்று மணி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

2-வதாக கொல்ல முயற்சிக்க கூடியவர்களில் ராம்குமார் குடும்பத்தில் உள்ள ராம்குமார் அப்பா அம்மா இரு தங்கைகளில் யாராவது ஒருவ ர் பலியாக்கப்படலாம். எனவே அவ ர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லக் கூடாது. ராம்குமார் குடும்பத்தினருக்கு போலிஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்பது சொந்த செலவில் நாமே சூனியம் வைத்துக் கொள்வது போன்றது. எனவே இயக்கங்கள் ராம்குமார் குடும்பத்திரை பாதுகாக்க பொறுப்பு ஏற்க வேண்டும். திலீபன் போன்ற ஒரு இளைஞன் தான் அந்த குடும்பத்தினரை தற்போது பாதுகாக்க முடியும். ஆனால் திலீபன் உயிருக்கும் ஆபத்து. அது உடனடியாக நடக்காது. சில மாதங்கள் ஆகலாம்.

சுவாதி படுகொலை விவாதங்கள் திசைமாற வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ச்சியான படுகொலைகள். இதை செய்வது ஆர்.எஸ்.எஸ் காவிக் கூலிப்படைகள்.

சுவாதி படுகொலை விவாதம் இப்போது ராம்குமார் படுகொலை விவாதமாக மாற்றப்பட்டுள்ளது. ராம்குமார் படுகொலையில் மர்மம் இருப்பதால் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிணஆய்வு நடைப்பெறக் கூடாது என்று போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

".... இன்னமும் ராம்குமாரின் பெற்றோர் தன் மகனின் உடலைக்கூட பார்க்க முடியாத ஜனநாயக நாட்டிலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?" என்று பொது விமர்சனத்தை திசை மாற்ற மணி படுகொலை உதவக்கூடும்.

நம் நோக்கம் இதுவல்ல; சுவாதியை கொன்றது யார்? ராம்குமாரை கொன்றது யார்? மணியை கொன்றது யார்? இனி யார் யாரை கொல்லப் போகிறார்கள்? இதற்கு அடிப்படியான அரசியல் என்ன? என்ற கேள்வி ஒவ்வொரு மக்களுக்கும் வரவேண்டும்.

திலீப்பனைப் போல் ரோசியைப் போல் நீங்கள் இல்லாவிட்டாலும் ராம்குமார் குடும்பத்தினரைக் காப்பாற்ற சகமனிதனுக்காக உங்கள் கண்டனக் குரல்களையாவது வெளிப்படுத்துங்கள்.

பி.கு : [இனி வழக்கறிஞர் ராம்ராஜ் ராம்குமார் குடும்பத்தினரை நெருங்க விடக்கூடாது. "என் சாதிசனம், நான் ஒண்ணுக்குள்ள ஒன்னு. நீ யார் அதை கேட்க" என்று இனியும் ராம்ராஜ் பேச ஆரம்பித்தால் இனி அமைதியாக இருக்க மாட்டேன். ராம்குமார் பெற்றோரின் மிச்சமிருக்கிற நம்பிக்கைகள் திலீபன், ரோசி, இன்னும் ஒரு சிலரும்தானே தவிர ராம்ராஜ் நீங்கல்ல]

-இவ்வாறு அந்தப் பதிவில் தமிழச்சி தெரிவித்துள்ளார்.

English summary
Blogger Thamizachi posted a new post in her Facebook page on Swathi murder case.
Please Wait while comments are loading...

Videos