For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக். 31ல் எல்லோரும் செல்போன் இன்டெர்நெட்டை துண்டித்து போராட பேஸ்புக்கில் தீயாய் பரவும் வேண்டுகோள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அக்டோபர் 31ம்தேதி, செல்போன் இன்டெர்நெட் இணைப்பை நாட்டிலுள்ள அனைவரும் துண்டித்து, கட்டண உயர்வுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்கூடிய மெசேஜ், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

அந்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: நாம் உபயோகிக்கும் மொபைல் நெட்வொர்க்கின் டேட்டா பேக்கேஜ், ஒரு காலத்தில் ரூ. 68 க்கு 1GB என்ற அளவில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைத்தது, பின்பு ரூ.80 க்கு விலையை உயர்த்தி டேட்டாவை 900 MBயாக குறைத்தனர். இப்போது ரூ.128க்கு 1GB, 2G டேட்டாவை 28 நாட்களுக்கு அளிப்பதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன.

Facebook users asked to disconnect mobile internet on October 31

ரூ.128 க்கு கிடைத்த 3G, 30 நாள் டேட்டா பேக்கேஜ் தற்போது ரூ.198ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்படியாக கம்பெனிகாரர்கள் விலையை மாற்றிக்கொண்டே இருக்கக் காரணம் இன்டர்நெட் நம்முடைய அன்றாட தேவையாக இருப்பதால்தான், இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம் ஆகவே நெட்வொர்க் நிறுவனங்கள், டேட்டா பேக் மூலமாக தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டுள்ளன.

நாம் ஒரு போதும் இதை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டோம் என்று இவர்களுக்கு தெரியும். ஆனால் அது உண்மையல்ல. நாம் இந்தியர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம், இம்மாதம் 31ம்தேதி வெள்ளிக்கிழமையன்று மொபைல் டேட்டாக்களை முற்றிலும் ஆப் செய்து நமது எதிர்ப்பை வெளியிடுவோம்.

அக்டோபர் 31ம்தேதி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான்,குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் என அனைத்து மாநிலங்களிலும் இந்தச் செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்பபட்டுள்ளது, ஆகவே 31ம்தேதி யாரும் மொபைல் இணையத்தை உபயோகிக்க வேண்டாம்,

இந்தத் தகவலை எல்லோருக்கும் பார்வேர்ட் செய்யவும். வெளி நாடுகளில் இதே போலதான் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர், நமக்கென்ன போனது என்று இந்த தகவலை

நிராகரிப்பு செய்ய வேண்டாம், நம் ஒற்றுமையை வெளிகாட்ட எத்தனையோ முறை முயற்சித்திருக்கிறோம் ஆனால் இம்முறை ஒற்றுமை காண்போம், காட்டுவோம். இவ்வாறு அந்த தகவலில் இடம்பெற்றுள்ளது. வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் இந்த தகவலை பகிருமாறும் அதில் வேண்டி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

English summary
Facebook users asked to disconnect mobile internet on October 31 for show their angry against data pack rate hike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X