For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகன் நீதிபதியாக இருக்கும் உச்சநீதிமன்றத்தில் நாரிமன் ஆஜரானது தவறு- முன்னாள் நீதிபதி சந்துரு

Google Oneindia Tamil News

Fali Nariman's appearance in Jaya case is wrong, says Retied Judge Chandru
சென்னை: தனது மகன் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பாலி நாரிமன் ஆஜரானது நெறிமுறைகளுக்குப் புறம்பானது என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பாலி நாரிமன் வெறும் தார்மீக நெறிமுறைகளை மட்டும் மீறவில்லை; மாறாக வழக்கறிஞர்களுக்கான இந்திய பார் கவுன்சிலின் நடத்தை விதிமுறைகளையும் தெளிவாக மீறியிருக்கிறார். இதற்காக நாரிமன் மீது டெல்லி பார் கவுன்ஸிலும், இந்திய பார் கவுன்ஸிலும் நடவடிக்கை எடுக்க முடியும்.

அத்துடன், நாரிமனின் மகன் இந்திய உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சூழலில் நாரிமன் இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கறிஞராக பணிபுரிவதே தவறு.

இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உறவினர்கள் யாரும் அந்த நீதிபதிகள் பணிபுரியும் உயர்நீதிநீதிமன்றங்களில் பணிபுரியக்கூடாது என்று இதே இந்திய உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தி, வலியுறுத்தி வருகிறது.

இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்களின் உறவினர்களாக இருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இந்திய உச்சநீதிமன்றம் பரிந்துரைக்கும் அந்த கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் கூட அப்படியே பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Retired Madras HC judge Chandru has said that senior counsel Fali Nariman's appearance in Jaya case in the SC is wrong.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X