For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களின் அமோக ஆதரவுடன் தமிழக முழு கடையடைப்புப் போராட்டம் வெற்றி - வீடியோ

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற ஆதரவு தெரிவித்து நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்ரன.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திரையரங்குகளில் பகல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் பாதிக்கபப்ட்டனர். பயிர்கள் கருகிப் போன அதிர்ச்சியில் பல நூறு விவசாயிகள் இறந்து போயினர். ஆனால் அரசு அவர்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கவில்லை.

 Farmers support Bandh is success in Tamilnadu

அரசின் பாராமுகத்தால், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி டெல்லியில் கடந்த 41 நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் கோரிக்களை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறது.

முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கம் அனைத்துக் கடைகளையும் மூடியுள்ளது. தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்ததால் பல இடங்களில் தொழிற்கூடங்கள் இயங்கவில்லை. ஆட்டோக்கள் ஓடவில்லை.

அதுமட்டுமில்லாமல் திரை உலகினர் எதிர்க்கட்சி நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால், திரையரங்களில் பகல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த முழு கடையடைப்புப் போராட்டம் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றிகரமாக நடந்து வருகிறது.

English summary
In Tamilnadu Bandh is going on successfully. No shops opened and most of the streets are empty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X