For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடிய விடிய தொடரும் நெடுவாசல் போராட்டம்.. உண்ணாவிரதத்தில் மக்கள் #SaveNeduvasal

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இயற்கை எரிவாயு எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த 14-ஆம் தேதி அனுமதி அளித்தது.

இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்றும் கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

6 இடங்களில் ஆழ்துளை கிணறு

6 இடங்களில் ஆழ்துளை கிணறு

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நெடுவாசலில் 6 இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டதாகவும், அவை எதற்கு என்பது தற்போதுதான் புரிகிறது என்று மக்கள் தெரிவித்தார்.

விவசாய பூமி

விவசாய பூமி

பயிர்கள் நன்கு செழித்து வளரும் விவசாய பூமியான நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கூறி அப்பகுதி விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் அமைப்பும் போராட்டக் களத்தில் உள்ளன. கடந்த 10 தினங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று உண்ணாவிரத்ததைத் தொடங்கினார். மேலும் திட்டம் முழுமையாக கைவிடப்படும்வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேரழிவு ஏற்படும்

பேரழிவு ஏற்படும்

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மனிதகுலத்துக்கு பேரழிவு நிச்சயம் ஏற்படும் என்றும் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை அழிக்கக் கூடாது என்றும் மக்கள் போராடி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை இல்லை

பேச்சுவார்த்தை இல்லை

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளதால் அந்தப் பேச்சுவார்த்தையானது வேறொரு நாளில் நடத்தப்படும் என்று தெரிகிறது.

English summary
Demanding to roll back the Hydrocarbon project, people of Neduvasal starts fasting today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X