For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெங்கு மரணங்கள்... கொசுவிற்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய போராட்டம்

தமிழகத்தில் தற்போது வரை டெங்கு மற்றும் மற்ற காய்ச்சலால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. டெங்கு கொசுவிற்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய ஆலோசனை கூறியுள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சேலம்: டெங்கு காய்ச்சலினால் மரணங்கள் அதிகரித்து வருவதால் கொசுக்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்படும் என்று சேலத்தில் போராட்டம் நடத்திய பெண்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. பல மரணங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன.

டெங்குவிற்கு 15 பேரும் சிக்குன்குனியாவிற்கு 32 பேரும் என மொத்தம் 47 பேர் மட்டுமே காய்ச்சலுக்கு உயிரிழந்திருப்பதாக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புள்ளிவிபரம் ஒன்றை கூறியுள்ளது.

பெண்கள் போராட்டம்

பெண்கள் போராட்டம்

மர்மகாய்ச்சலுக்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சேலம் அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் முன்பு, தமிழ்நாடு பெண்கள் சங்கத்தின் சார்பாக சுகாதார சீர்கேட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள்.

குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்

குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்

மதுரையில் வைகை அணையில் தண்ணீர் ஆவியாதலைத் தடுப்பதற்கு செல்லூர் ராஜூ மேற்கொண்ட தெர்மாகோல் திட்டம் போல டெங்கு கொசு உற்பத்தியைத் தடுப்பதற்கு மருத்துவர்கள் குழுவோடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்து டெங்கு கொசுக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினர்.

அமைச்சருக்கு சீர்வரிசை

அமைச்சருக்கு சீர்வரிசை

கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் கொசுக்களுக்கு குடும்பக் கட்டுபாடு செய்து சீர்வரிசையை சுகாதார அமைச்சருக்கும் சுகாதார செயலாளருக்கும் அனுப்புவோம்.

நல்லா பண்றாங்கய்யா ராட்டம்

நல்லா பண்றாங்கய்யா ராட்டம்

நெல்லையில் கொசு உற்பத்தியை தடுக்கத் தவறிய மாநகராட்சியைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கொசுவலையைப் போர்த்தியபடி ஆர்பாட்டம் நடத்தினர். அதோடு கொசு உற்பத்தியில் சாதனை படைத்த மாநகராட்சி என்ற விருதுக்கு உரிய சான்றிதழையும் கோப்பையையும் கொடுத்தனர்.

English summary
Salem women protest control dengue minister Vijaya Baskar fever might be cut by neutering the mosquitoes that carry family planning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X