For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யானைகள் புத்துணர்வு முகாம்: ஜெ.வை முட்டித் தள்ளிய யானைக் குட்டி எங்கே?

Google Oneindia Tamil News

கோவை: இன்று நடைபெற உள்ள யானைகள் புத்துணர்வு முகாமில் கடந்த ஜூலை மாதம் முதல்வர் ஜெயலலிதாவை முட்டித் தள்ளிய குட்டியானை காவேரிக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று முதல் 48 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள கோவில் மற்றும் திருமட யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெற உள்ளது. அதில் இந்தாண்டுக் கூடுதலாக வனத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள யானைகளுக்கும் நலவாழ்வு முகாம் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

ஆனால், இந்த யானைகள் நலவாழ்வு முகாமில் கடந்த ஜூலை மாதம் ஜெயலலிதாவை முட்டிய குட்டியானை காவேரிக்கு மட்டும் அனுமதி மறுக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்...

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்...

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி வரும் 19- ஆம் தேதி முதல் 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 4 வரை 48 நாட்களுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலை ஒட்டி பவானி ஆற்றுப் படுகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெறுகிறது.

மொத்தம் 98 யானைகள்...

மொத்தம் 98 யானைகள்...

முகாமில் திருக்கோயில், திருமடங்களுக்குச் சொந்தமான 43 யானைகள் மற்றும் வனத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 55 யானைகள் என மொத்தம் 98 யானைகள் பங்கேற்கவும் இதற்காக ரூ.1.53 கோடி ஒதுக்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி யானை...

புதுச்சேரி யானை...

இந்த நிலையில், புதுச்சேரி மாநில இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான லட்சுமி என்ற யானையையும் முகாமில் பங்கேற்க அனுமதிக்கும்படி புதுச்சேரி மாநில அரசு கேட்டுக் கொண்டது.

நூறு யானைகள்....

நூறு யானைகள்....

மேலும், நாகூர் தர்காவுக்குச் சொந்தமான பாத்திமா பீவி என்ற யானையையும் இந்த முகாமில் பங்கேற்க அனுமதிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த கோரிக்கைகளை ஏற்று, இரண்டு யானைகளையும் முகாமில் அனுமதிக்க ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் மூலம், சிறப்பு முகாமில் பங்கேற்கும் யானைகளின் எண்ணிக்கை நூறாக உயர்ந்துள்ளது.

புத்துணர்வு முகாம்...

புத்துணர்வு முகாம்...

கோவைமாவட்டம் ,மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் அருகேயானைகள் புத்துணர்வுமுகாம் நடைபெற உள்ளது. அதையொட்டி,தமிழகத்தில் உள்ளகோவில் யானைகள் வனத்துறையானைகள் நேற்று வந்து சேர்ந்தன.

லாரியில் வந்த யானைகள்....

லாரியில் வந்த யானைகள்....

கோவில் சார்பிலும்,அறநிலையத்துறைசார்பிலும் யானைகளுக்குவரவேற்புஅளிக்கப்பட்டுபின்னர் அவைகள் லாரியிலிருந்துகீழே இறக்கப்பட்டுமுகாம் நடக்கும் பவானிஆற்றின் கரையோரம் உள்ளயானைகள் புத்துணர்வுமுகாமிற்குகொண்டுசென்றனர்.

வனத்துறை யானைகள்....

வனத்துறை யானைகள்....

வனத்துறையானைகளுக்குநெல்லித்துறைஊராட்சிவிளாமரத்தூர் என்ற இடத்தில் பவானிஆற்றின் கரையோரம் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்துசரவணன்,முதுமலைவனவிலங்குசரணாலயத்தில் இருந்துசுமங்கலா,விஜய்,சுசி,பொம்மன் ஆகிய யானைகள் வந்துள்ளன.

துவக்க விழா....

துவக்க விழா....

இவ்விழாவில் இந்துசமய அற நிலையத்துறைஅமைச்சர் மாண்புமிகு. பி. செந்தூர் பாண்டியன்,வனத்துறைஅமைச்சர் மாண்புமிகு. எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டுபுத்துணர்வுமுகாமை துவங்கி வைத்தனர்.

கண்காணிப்புக் கேமராக்கள்...

கண்காணிப்புக் கேமராக்கள்...

நலவாழ்வு முகாமினைக் கண்காணிக்கும் வகையில் ஐந்து கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. மேலும், முகாமில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு தக்காளி, கேரட் போன்ற இயற்கை உணவுகளை வழங்கப் பட திட்டமிடப் பட்டுள்ளது.

குட்டியானை காவேரி...

குட்டியானை காவேரி...

கடந்தாண்டு ஜுலை மாதம் கொடநாட்டில் தங்கி இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கார் மூலம் அங்கிருந்து முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த குட்டியானை ஒன்று அவரை திடீரென முட்டி தள்ளியது.

பங்கேற்கவில்லை...

பங்கேற்கவில்லை...

இதனால், தடுமாறிய அவரை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்நிலையில், தற்போது அந்தக் குட்டியானை காவேரி யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Elephants have begun arriving from all over the State at the rejuvenation camp established on a six-acre land along the banks of River Bhavani at Thekkampatti near Mettuppalayam in Coimbatore district. The camp will be formally inaugurated on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X