For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடாமல் வெளுக்கும் ராஜேந்திர பாலாஜி.. ஆரோக்யா, விஜய், டோல்டா பாலிலும் கலப்படம் என அதிரடி!

தனியார் பால் தரமற்றது, ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டது உண்மைதான் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆரோக்கியா, விஜய், டோட்லா ஆகிய தனியார் பால் தரமற்றது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தார்.

புனேவில் உள்ள பால்பரிசோதனை கூடம் அனுப்பிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

Formaldehyde found in milk brands, says minister Rajendra Balaji

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக குற்றம்சாட்டி வந்தார்.

தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயன கலப்படம் உள்ளதாக கடந்த மே மாதம் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊடகங்களுக்கு அளி்த்த பேட்டியில் கூறியிருந்தார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தின.

இந்நிலையில் ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், எங்களது நிறுவனம் குறித்து ஆதாரமின்றி குற்றச் சாட்டுக்களை தெரிவிக்க அமைச் சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு தலா ரூ. 1 கோடியை இழப்பீடாக வழங்க அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், "பால்வளத்துறை அமைச்சர் ஆதாரமின்றி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேசக்கூடாது என உத்தரவிட்டு, இதுதொடர்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் பால் கலப்படத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. நான் ஒரு எம்எல்ஏ என்ற முறையிலும், அமைச்சர் என்ற முறையிலும் பால் கலப்படம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கருத்து தெரிவித்தேன். மேலும் நான் ஒரு பொது ஊழியர் என்ற முறையில் எனது கடமையை செய்துள்ளேன். இதற்கு முழு உரிமை உள்ளது. இதற்காக என் மீது சிவில் வழக்கு தொடர முடியாது. மேலும் என்னை மிரட்டும் விதமாகவே தனியார் பால் நிறுவனங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளன.

என் மீது வழக்குத் தொடர்ந்துள்ள மூன்று நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களும் தரம் குறைந்தவை தான். குறிப்பாக டோட்லா நிறுவனத்தின் பாலில் ரசாயனக் கலப்படம் உள்ளது என்பதால் தான் தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அந்த நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.

அதுபோல விஜய் டைரிஸ் நிறுவனத்தின் பாலும் தரம் குறைந்தவை தான். எனது புகாருக்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் நான் கூறிய கருத்துகளின் மூலமாக அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. அதற்கான ஆதாரங்களை அவை தாக்கல் செய்யவில்லை.

ஒரு அமைச்சர் என்ற முறையில் எனக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்துள்ளதன் மூலமாக இந்த பால் நிறுவனங்கள் தங்களின் தவறை மறைக்க நினைக்கின்றன. எனவே எனக்கு எதிராக தலா ரூ. ஒரு கோடி இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

3 தனியார் நிறுவனங்களின் பால் தரமற்றது என்று பரிசோதனையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை தாக்கல் செய்தார். இதனையடுத்து தனியார் பால் நிறுவனங்கள் தொடந்த வழக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

English summary
State milk and dairy development minister K T Rajendra Balaji today moved the Madras High Court, seeking dismissal of the suits by Arokya,Vijay private milk manufaturers over his statements in the media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X