For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்மலை வனப்பகுதியில் பிடிப்பட்ட நபரை தமிழக வனப் பகுதிக்கு அழைத்து வந்து விசாரணை

Google Oneindia Tamil News

செங்கோட்டை: கேரளா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே மாவோயிஸ்ட்நடமாட்டம் வனப் பகுதிகளில் உள்ளதாக தகவல்கள் வெளியானது.இந்நிலையில் அம்மாநில வனத்துறையும்,காவல்துறையும் வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டைகளை நடத்தினர்.

அதில் யாரும் சிக்காத நிலையில் கடந்த மாதம் வயனாடுப் பகுதியில் மாவோயிஸ்டுக்கள் தீடிர் தாக்குதல்களில் ஈடுப்பட்டனர்.இதனைத்தொடர்ந்து மாவோயிஸ்டுக்கள் நடமாட்டம் உள்ளதையும்,அவர்கள் வனப்பகுதியில் ஊடுருவியுள்ளதையும் அம்மாநில காவல்துறை உறுதி செய்தது.

இதனைத்தொடர்ந்து தமிழக கேரளா எல்லைப் பகுதிகளையும் எல்லைகளை இணைக்கும் வனப் பகுதிகளையும் தீவீரமாக கண்காணிக்க இருமாநில காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்து அதற்க்கான ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி பொதுமக்களிடம் மர்மநபர்கள் நடமாட்டம் குறித்து தகவல்களை தங்களுக்கு தெரிவிக்கவும் தகவல்களை பரிமாறவும் இதற்காக வனப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களான காணியின மக்களை அழைத்து தனி ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தினர்.

இந்நிலையில் தமழக-கேரளா எல்லைப் பகுதியான அடர்ந்த வனப்பகுதியான தென்மலை செந்தூரணி வனப் பகுதியில் உள்ள "ஊமையாரு"என்றப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தபோது கடந்த 27 ஆம் தேதி மர்மமனிதன் ஒருவன் நடமாடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அவனைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவன் ஒரிசா மாநிலத்தை சார்ந்த ஜஸ்வந்த் பூசாரி என்பது தெரிய வந்தது.அவனை கைது செய்த வனத்துறையினர் 29 ஆம் தேதி புனலூர் வனத்துறை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நயனா முன் ஆஜர் படுத்தினர்.

அவன் பிடிப்பட்டப் பகுதியில் தொடர்ந்து சோதனை நடத்திய வனத்துறையினர் அங்கிருந்து பேக் ஒன்றைக் கைப்பற்றினர்.அதில் ஒரு ஜெர்க்கின்,சேலை,ஒரு சட்டை,உள்ளிட்டவை இருந்தன.இந்நிலையில் நீதிமன்றக் காவலில் இருந்த அவனை நேற்று தங்களது காவலுக்கு எடுத்து விசாரணை நடத்த புனலூர் வனத்துறை நீதிமன்றத்தில் செந்தூரணி வனத்துறை சார்பில் மனு செய்யப்பட்டது.வணத்துறையின் மனுவை ஏற்ற வனத்துறை நீதிமன்றம் அவனிடம் 7 நாட்கள் விசாரணை மாஜிஸ்திரேட் நயனா அனுமதி வழங்கினார்.

Forster investigate the unknown person in Tamil Nadu forest…

அதனைத்தொடர்ந்து செந்தூரணி வனத்துறை வன அதிகாரி லக்ஷ்மி மற்றும் அதிகாரிகள் குழுவினர் அவனை தென்மலை செந்தூரணி வனத்துறை அலுவலகத்திற்கு கடந்த 2 ந் தேதி அழைத்து வந்தனர்.

பின்னர் கொல்லம் மாவட்ட தனிப்படை துணைக் கண்காணிப்பாளர்.ஜேக்கப்,நெல்லை மாவட்ட கியூ பிராஞ் துணைக் கண்காணிப்பாளர் சுகந்த பகவதி ,இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன்,உள்ளிட்ட அதிகாரிகள் அவனிடம் விசாரணை நடத்தினர்.கடந்த 2 ஆம் தேதி வனக்காவலில் எடுக்கப்பட்ட ஜஸ்வந்த் பூஜாரியை அவன் பிடிப்பட்ட பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு அவன் எப்படி அடர்ந்த வனப் பகுதிக்குள் வந்தான் என்றும் விசாரணை நடத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று காலை தென்மலை செந்தூரணி வனத்துறை அதிகாரி சிவபிரசாத் தலைமையில் ஆயுத பாதுக்காப்போடு அவனை தமிழக கேரளா எல்லை வனப்பகுதியான செங்கோட்டை அருகேயுள்ள குண்டாறு வனப்பகுதிக்கு அழைத்துவந்தனர்.அவன் தென்மலைக்கு எப்படி சென்றான் அவன் சென்ற மேற்குத் தொடர்ச்சி மலை பாதை வழியாக அழைத்து செல்லப்பட்டான்.

குறிப்பிட்ட பகுதி வரை அழைத்து செல்லப்பட்டு பாதை உறுதி செய்யப்பட்ட பின்னர் அவனை திரும்ப வனத்துறையினர் அழைத்துக் கொண்டு தென்மலைக்கு திரும்பினர்.

தொடர்ந்து அவனிடம் நடக்கும் விசாரணைக்குப் பின்தான் பல்வேறு தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக வனத்துறை,மற்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

English summary
The unknown person who got by the foresters were pick to Tamil Nadu forest for investigation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X