For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தி.மு.க. மா.செ. தேர்தல்: நாமக்கல் காந்திசெல்வன், தேனி மூக்கையா, திருவாரூர் பூண்டி கலைவாணன் வெற்றி!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் 2வது கட்ட மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் நாமக்கல் காந்திசெல்வன், தேனி மூக்கையா, திருவாரூர் பூண்டி கலைவாணன், கரூர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.

திமுக வரலாற்றில் முதல் முறையாக 30 மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 13 மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

அதில் கன்னியாகுமரி சுரேஷ்ராஜன் உள்ளிட்ட 11 மாவட்ட செயலாளர்கள் வெற்றி பெற்றனர். கன்னியாகுமரி மேற்கு மற்றும் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தேர்தலில் பிரச்சனை ஏற்பட்டது.

Gandhi Selvan and 7 won in DMK district secretaries elections

பின்னர் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளராக மனோ தங்கராஜ் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட தேர்தலில் போட்டியாளர்கள் இருவரை திமுக தலைமை விலகச் செய்தது. இதனால் சி.ஆர். ராமச்சந்திரன் மாவட்ட செயலாளரானார்.

அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று அண்ணா அறிவாலயத்தில் திருவாரூர், கரூர், தேனி, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, தருமபுரி, கோவை மாநகர் தெற்கு, கோவை மாநகர் வடக்கு ஆகிய 8 மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

திருவாரூர் - பூண்டி கலைவாணன்

கரூர் - நன்னியூர் ராஜேந்திரன்

தேனி - எல்.மூக்கையா

தருமபுரி - தடங்கம் சுப்ரமணியம்,

நாமக்கல் கிழக்கு - ஜெ.காந்திசெல்வன்

நாமக்கல் மேற்கு- கே.எஸ்.மூர்த்தி

கோவை மாநகர் வடக்கு - வீரகோபால்

கோவை தெற்கு- நாச்சிமுத்து

இன்று..

இன்று தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள்:

திருவண்ணாமலை வடக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு. ராமநாதபுரம், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி (மத்தி)

English summary
DMK district secretaries election were held at the party headquarters for the post of 8 on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X