சென்னையில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.. ஒரு மாணவி பலி.. பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள ஊரபாக்கம் பகுதியை சோ்ந்தவா் கணேசன். இவரது மகள் நேத்ரா ஸ்ரீ மாம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தாா். வழக்கம்போல பள்ளிக்கு செல்வதற்காக நேத்ரா ஸ்ரீ வேனில் பயணம் செய்தாா். இவருடன் மேலும் சில மாணவா்கள் வேனில் இருந்துள்ளனா்.

வேன் வண்டலூா் சாலையில் நல்லப்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனாின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Girl dies after school van accident

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த நேத்ரா ஸ்ரீ உள்ளிட்ட 5 மாணவிகள் படுகாயம் அடைந்தனா். அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நேத்ரா ஸ்ரீ உயிாிழந்தாா். 10க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்துக்குள்ளான வேன் ஓட்டுனா் தப்பி ஓடிவிட்டாா். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினா் ஓட்டுனரை தேடி வருகின்றனா்.

Tempo Van Accident in Villupuram-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
10 year old School girl was killed when a van accident she was travelling to school overturned on the Vandalure - Kelambakkam Road on Monday.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்