For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு செஸ்ஸில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்!

Google Oneindia Tamil News

தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை குடியரசு தின மற்றும் பாரதியார் தின குறுவட்டு அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழக அரசு 2016- 2017ஆம் ஆண்டிற்கான குடியரசு தின மற்றும் பாரதியார் தின குறுவட்டு அளவிலான சதுரங்க போட்டிகளை தமிழகம் முழுவதும் நடத்தியது. தேவகோட்டை குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இப்பள்ளியின் 5ம் வகுப்பு அஜய் பிரகாஷ் என்ற மாணவர் 3ம் இடம் பிடித்து வெற்றி பெற்றதுடன் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் விளையாடவும் தகுதி பெற்றுள்ளார்.

Govt school student excels in Chess contest

பெரும்பாலும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளே வெற்றி பெற்றுள்ள இப்போட்டிகளில் அரசு உதவி பெறும் இப்பள்ளி மாணவர் எந்த விதமான தனியார் பயிற்சியும் இல்லாமல் பள்ளியில் கொடுத்த பயிற்சியுடன் சுமார் 30 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் கருப்பையாவிற்கும், மாணவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

English summary
A Govt school student excelled in Chess contest held in Sivagangai dt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X