For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்துல் கலாம் பெயரை பயன்படுத்த பொன்ராஜ் கட்சிக்கு ஹைகோர்ட் தடை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பெயரை, பொன்ராஜ் துவக்கிய கட்சிக்குப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலாம் பெயரையோ, புகைப்படத்தையோ அரசியல் கட்சிக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், அப்துல் கலாம் லட்சிய இந்திய என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவக்கியுள்ளார். நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் இக்கட்சி போட்டியிடுகிறது. தமிழருமணியனின் காந்திய மக்கள் இயக்கம் இந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

HC ban Kalam's name for Ponraj party

பொன்ராஜ் துவக்கியுள்ள கட்சிக்கு, அப்துல் கலாமின் பெயரைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, கலாமின் சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசியல் காரணங்களுக்காக அப்துல் கலாம் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும், முத்துமீரான் மரைக்காயரின் மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

English summary
Madras high court ban Ponraj political party dont use Abdulkalam's Name and images.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X