மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு ஹைகோர்ட் கிளை தடை!

By:

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

2013-ம் ஆண்டு திண்டுக்கல்லில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

HC bench stays on Defamation Case against MK Stalin

இப்பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் அரசையும் ஸ்டாலின் விமர்சித்ததாக கூறி திண்டுக்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி மு.க.ஸ்டாலின் தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, ஸ்டாலின் மீதான திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கு குறித்து பதில் அளிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
The stay was granted on MK Stalin's plea on a defamation case filed by the state government.
Please Wait while comments are loading...

Videos