For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மசாஜ் கிளப்புகளை கட்டுப்படுத்த அதிரடி சட்டம்: அழகிகளை வைத்து விபச்சாரம் செய்தால் நடவடிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மசாஜ் கிளப்புகளில் விபசாரம் செய்வதை தடுக்க அதிரடியாக அரசு சட்டம் கொண்டு வரப்போகிறது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மசாஜ் கிளப் என்ற போர்வையில் விபசார தொழில் செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வருகின்றன. இதனையடுத்து சென்னையில் கடந்த ஆண்டு மசாஜ் விபசாரம் செய்த கிளப்புகள் மீது 45 வழக்குகள் போடப்பட்டு, 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மசாஜ் விபசாரத்தில் ஈடுபட்ட 50 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டும் இதுவரை 7 மசாஜ் கிளப்புகள் மீது வழக்கு போடப்பட்டு, 9 பேர் கைதாகி உள்ளனர். இதனால் உண்மையிலேயே மசாஜ் கிளப் நடத்துபவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

HC directive to police on massage centres

மசாஜ் சென்டர்கள்

சென்னையில் மட்டும் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மசாஜ் கிளப்புகள் உள்ளன மசாஜ் தொழிலுக்கு சட்டரீதியாக எந்தவித அங்கீகாரமும் இல்லை. அழகு நிலையங்கள் பெயரிலும் லைசென்ஸ் பெற்று, மசாஜ் கிளப்புகளை நடத்துகிறார்கள்.

முறையான பயிற்சி

ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ் என்று விதவிதமான மசாஜ் கலைகள் உள்ளன. உண்மையிலேயே மசாஜ் செய்யும் கிளப்புகளும் உள்ளன. சித்தா, ஆயுர்வேதா, வர்மகலை முறையில் மசாஜ் செய்வதற்கு முறையாக படித்து உரிய நிபுணர்கள் மூலமும் இந்த மசாஜ் கிளப்புகள் நடக்கின்றன.

தடம் புரளும் தொழில்

நாளடைவில் வருமானம் இல்லாததால், மசாஜில் விபசாரம் கலந்து இந்த தொழில் தடம் புரண்டு போய்விடுகிறது. தற்போது நாளிதழ்களிலும், இணையதளம் வாயிலாகவும், செல்போனில் வாட்ஸ்-அப் மூலமும் மசாஜ் கிளப்புகள் விளம்பரம் செய்கின்றன.

மசாஜ் செய்யும் அழகிகள்

கை-கால் வலியா, உடல் வலியா, முதுகு வலியா, சுளுக்கு பிடித்திருக்கா, நிபுணத்துவம் பெற்ற அழகிய இளம்பெண்கள் மூலம் மசாஜ் மருத்துவம் செய்து, குணப்படுத்துகிறோம் என்று அந்த விளம்பரத்தில் வாசகங்கள் உள்ளன. மன வலிக்கு கூட, எங்கள் மசாஜ் வைத்தியம் பலன் கொடுக்கும் என்றும் விளம்பரத்தில் மறைமுகமாக தெரிவித்துள்ளனர்.

விபச்சாரத் தொழில்

மன வலிக்கு கொடுக்கும் வைத்தியம்தான் விபசார உல்லாசம். இதை சங்கேத மொழியில் தெரிவித்துள்ளனர். மசாஜ் விபசாரத்தை ஒழிக்க விபசார தடுப்பு போலீசார் கடந்த சில ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உயர்நீதிமன்றம் அறிவுரை

மசாஜ் கிளப்புகளில் போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது. நேர்மையாக நடக்கும் கிளப்புகளில் சோதனை என்ற பெயரில் போலீசார் தொல்லை கொடுக்கக்கூடாது என்றும், அதே நேரத்தில் தவறு நடக்கும் கிளப்புகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அதிரடி சட்டம்

மேலும் மசாஜ் கிளப்புகளை சட்டவளையத்துக்குள் கொண்டு வந்து, அவற்றை நியாயமான நெறிமுறைகளின்படி நடத்திடவும், அரசு அனுமதி பெறுவது தொடர்பாக உரிய வழிமுறைகளை வகுத்து உரிய சட்டம் கொண்டுவரவும், உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது.

தமிழகத்தில் சட்டம்

தற்போதுள்ள சட்டத்தில் மசாஜ் கிளப் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்தியா முழுவதும் மசாஜ் கிளப்புகளை நெறிப்படுத்த எந்த மாநிலத்திலும் சட்டங்கள் இல்லை. தமிழகத்தில்தான் மசாஜ் கிளப்புகளை ஒழுங்குபடுத்த அதிரடி சட்டம் விரைவில் வரப்போகிறது. இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருகிறது.

நேர்மையான மசாஜ் கிளப்கள்

இந்த அதிரடி சட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், நேர்மையாக மசாஜ் கிளப் நடத்துபவர்களுக்கு உரிய சட்டபாதுகாப்பு கிடைக்கும். அழகான அந்த தொழில் விபசார கலப்படம் இல்லாமல் வளரவும் உதவிகரமாக இருக்கும் என்கின்றனர் இந்த தொழிலை பரம்பரையாக செய்து வருபவர்கள்.

English summary
The police should not, as a matter of routine and without any basis, raid or interfere with the business of beauty parlours or massage centres and spas, the Madras High Court has said. The country had a potential to develop this industry thanks to availability of yoga, naturopathy, ayurveda, siddha and varma experts to provide health care services
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X