For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலாமுக்கு அஞ்சலி.. ஒரு வாரத்துக்கு கூடுதலாக 15 நிமிடம் பணியாற்றுகிறது சென்னை ஹைகோர்ட்

By Madhivanan
Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வார காலத்துக்கு 15 நிமிடங்கள் பணியாற்றுவது என சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி காலமானார். அவரது மறைவுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது.

kalam high court

இந்தக் கூட்டத்தில் பேசிய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வார காலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூடுதலாக 15 நிமிடங்கள் அதாவது மாலை 5 மணிவரை இயங்கும் என்றார். மேலும் கலாமின் மக்கள் பணி குறித்தும் கவுல் புகழாரம் சூட்டினார்.

இந்த அஞ்சலி கூட்டத்தில் தலைமை நீதிபதி, நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

English summary
The Madras High would function 15 minutes extra every day from tomorrow till the rest of the week in honour of former President APJ Abdul Kalam who died on July 27.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X