For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அரசின் இலவச வேட்டி சேலை ஒப்பந்தம் ரத்து: ஹைகோர்ட் உத்தரவு

இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான நூல் கொள்முதல் டெண்டரை இறுதி செய்ய தமிழக அரசுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. புதிய டெண்டரை கோரலாம் என்று நீதிபதி துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.

பிற மாநில நிறுவனங்களை ஒப்பந்தத்தில் பங்கேற்க அரசு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இந்த உத்தரவை உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்துள்ளார்.

HC quashes the Free Dhoti and Saree tender

பொங்கல் பண்டிகையை யொட்டி இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு நூல் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப் பாணையை தமிழக அரசு கடந்த ஜூன் 22ஆம் தேதி வெளியிட்டது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சோழபுரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கட்ராம் நூற்பாலை மில் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். அந்த திட்டத்துக் கான நூல் கொள்முதல் டெண்ட ரில், மாசு கட்டுப்பாடு வாரியத் திடம் இருந்து ஜீரோ டிஸ்சார்ஜ் சான்றிதழ் பெற்ற நூற்பு நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனையால் அகில இந்திய அளவில் நடக்கும் டெண் டரில் ஜீரோ - டிஸ்சார்ஜ் பெறாத மற்ற நூற்பு நிறுவனங்களால் பங்கேற்க முடியாது.

எங்களது நிறுவனம் சாயமேற்றுவதற்காக மும்பையில் உள்ள நூற்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். ஆனால், அகில இந்திய அளவில் ஜீரோ - டிஸ்சார்ஜ் யூனிட் சான்றிதழ் கொண்ட சாயக் கழிவு ஆலைகள் மற்றும் நூற்பு ஆலைகள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன.

மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் சாயக்கழிவு நீர் கடலில் கலக்க அனுமதி உள்ளது. எனவே, இந்த ஒரு நிபந்தனையின் மூலம் இலவச வேட்டி, சேலை டெண்டரில் பெரும் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.

எனவே, இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான நூல் கொள்முதலுக்கான டெண்டரை இறுதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி எம்.துரை சாமி முன்பு கடந்த ஜூலை 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜூலை 13ஆம் தேதி இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான நூல் கொள்முதல் டெண்டரை இறுதி செய்ய தமிழக அரசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிபதி உத்தர விட்டார்.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்ட ஒப்பந்தத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இலவச வேட்டி சேலை திட்ட ஒப்பந்தத்தில் விதிகளை பின்பற்றவில்லை என்று தீர்ப்பில் நீதிபதி துரைசாமி கூறினார். தமிழக அரசு புதிய ஒப்பந்தம் கோரலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.

English summary
Madras HC has quashed the tender of TN Govt's free Dhoti and Saree scheme and asked the state to go for fresh tenders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X