For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு அலுவலகங்களில் ஜெ. படம் நீக்கம்...ஒரே மாதத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுத் திட்டங்களில் இடம்பெற்றுள்ள ஜெயலலிதாவின் படத்தினை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா (முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகன்) இதுதொடர்பாக ஒரு வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.

High court ordered to Tamil Nadu government in Jaya Photo issue…

அதில், "செப்டம்பர் 27 ஆம் தேதியன்று சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் அரசு அலுவலகங்களிலும், அரசு திட்டங்களான இலவச மடிக்கணினி, பள்ளிக்கூடங்கள் போன்றவற்றில் பயன்படுத்துவதும் தவறானது. எனவே, ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்றக் கோரி அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனு, உயர்நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு, மனுதாரரின் கோரிக்கையை 4 வாரத்திற்குள் பரிசீலனை செய்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டு வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டனர்.

English summary
Chennai high court ordered that Tamil Nadu government will review about the Jayalalitha photo issue in government offices and schemes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X