For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணன் ஸ்டாலின் தமிழகத்தில் அப்ப இந்தியை தடுக்கலையே... - நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது இந்தி திணிப்பு பற்றி அண்ணன் ஸ்டாலின் ஏன் கேட்கவில்லை. தமிழகத்தில் இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் கைதுசெய்யப்பட்டதற்கும் பாஜகவுக்கும் எந்தத் சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளைச் சார்ந்து வளரும் நிலையில் பாஜக இல்லை என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Hindhi in TN :Nirmala Seetharaman questioned M K Stalin

சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக மற்றும் அதிமுக, காங்கிரஸ் கட்சியினரை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

அதிமுகவின் ஒரு அணியை மட்டும் பலப்படுத்தி, தமிழகத்தில் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியில் இடம்பிடிக்க முயற்சிக்கிறது என்ற தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதற்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளைச் சார்ந்து வளரும் நிலையில் பாஜக இல்லை என்று கூறினார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் பாஜக இந்தி திணிப்புக்கு முயல்வதாக திர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து பேசிய அவர், "காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது இந்தி பற்றி அண்ணன் ஸ்டாலின் ஏன் கேட்கவில்லை. தமிழகத்தில் இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

கொடநாடு கொலை வழக்கு போன்ற விவகராங்களில் தமிழக அரசு சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று கூறிய நிர்மலா சீதாராமன், லஞ்ச வழக்கில் டிடிவி தினகரன் கைதுசெய்யப்பட்டதற்கும் பாஜகவுக்கும் எந்தத் சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
Union minister Nirmala Seetharaman today questioned M K Stalin's statement the Union government was imposing Hindi on TamilNadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X