இந்து முன்னணி பிரமுகர் கொலை… கோவையில் வன்முறை… கடைகள் அடைப்பு

கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டதால் அங்கு கடைகள், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. இதனால் கோவையில் பதற்றம் நிலவி வருகிறது.

கோவையில் உள்ள சுப்ரமணியபாளையத்தில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று கொலை செய்து விட்டு ஓடிவிட்டது. இதனையடுத்து இந்து முன்னணியினர் அங்கு முழு அடைப்பு அறிவித்தனர்.

Hindu Munnani functionary murder: unrest in Coimbatore

மேலும், இன்று காலை சசிகுமார் உடல் இருக்கும் மருத்துவமனைக்கு ஊர்வலமாக இந்து முன்னணியினர் சென்றனர். அப்போது வழியில் இருந்த ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தினார்கள். கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீதம் கடைகள் கோவையில் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே, சசிகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
Following the murder of Hindu Munnani Sasikumar in Thursday night, shops and commercial establishments remained closed in Coimbatore.
Please Wait while comments are loading...

Videos