சேலம் மாரியம்மன் ஆடித்திருவிழா - இரு சமூகத்தினர் மோதலால் பதற்றம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: ஆடித்திருவிழாவை நடத்த இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், இந்து மற்றும் முஸ்லீம்களிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் உருவாகியுள்ளது. அதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் கச்சிபாளையம் பகுதியில் உள்ளது கரீம்காம்பவுண்ட் என்னும் குடியிருப்பு. இங்கு இந்துக்களும் இஸ்லாமியர்களும் சம அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கரீம் காம்பவுண்டில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடத்த அங்குள்ள இந்துக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆனால், இஸ்லாமியர்களோ ஆடித்திருவிழா நடத்தக் கூடாது என கூறியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் உண்டாகியுள்ளது. அதையடுத்து அங்கு போலீசார் வந்து மோதலைக் கட்டுப்படுத்தும் போது இந்துக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அதைப் பார்த்த இஸ்லாமியர்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் இருதரப்பிலிருந்தும் தலா ஐவரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Cow Chasing Festival in Salem-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
In Salem Katchipalayam Kareem compound area Hindus planned to celebrate Aadi festival and MUslim against of it. So Clash between two groups and tension erupts.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்