கமல்ஹாசன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த இந்து மக்கள் கட்சி.. ஏன் தெரியுமா?

இந்துக்கள் மனதை புண்படுத்தும் படி தொடர்ந்து பேசிவரும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்துக்கள் மனதை புண்படுத்தும் படி தொடர்ந்து பேசிவரும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமலஹாசன் மஹாபாரதத்தை கிண்டல் செய்யும் விதமாக தொலைக்காட்சியில் இழிவாய் பேசியதாகவும், இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 Hindu People Party lodged a complaint against Kamal Haasan

தேசிய ஒருமைப்பாட்டிற்கும், இந்திய இறையான்மைக்கு எதிராகவும் பேசி வரும் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் வீரமணிக்கம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

மேலும் நடிகர் கமலஹாசன் தொடர்ந்து இந்து மக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என இந்து மக்கள் கட்சியினர் எச்சரிக்கை விடுத்தனர்.

English summary
Hindu People Party functionaries lodged a complaint against Actor Kamal Haasan for his derogatary comment on MahaBharat
Please Wait while comments are loading...