For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுச்சேரி இரவு நேரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பானதா?.. ராத்திரியில் ரெய்டு போன கிரண் பேடி!

புதுச்சேரி மாநிலத்தில் இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக உணரலாம் என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

புதுச்சேரி : புதுச்சேரியில் இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பு போதுமானதாக இருப்பதாக தானே கள ஆய்வு மேற்கொண்ட அனுபவத்தை டுவிட்டரில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் கிரண்பேடி. மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்பது, முறையான நடவடிக்கைகள் எடுக்காத அதிகாரிகளை லெப்ட் ரைட்டு வாங்குவது என்று விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

 How Puducherry is safe for girls at night, kiran bedi takes secret night visit?

தொடர்ந்து அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளில் தலையிட்டதால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கிரண்பேடிக்கும் இடையே அதிகாரப் போட்டியும் நடந்தது. எனினும் தனது வழியில் திடமாக பயணித்து வருகிறார் கிரண்பேடி. இந்நிலையில் இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்று மாறுவேட்த்தில் ஆளுநர் கிரண்பேடி நபர்வலம் போயுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரண்பேடி நள்ளிரவு ஆளுநர் மாளிகை ஊழியர் ஆஷா குப்தாவுடன் இருசக்கர வாகனத்தில் ரகசிய நகர்வலத்தை மேற்கொண்டேன். பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் சுற்றி வந்தேன். ஆய்வின் முடிவில் இரவு நேரத்தில் பெண்களின் பாதுகாப்பு போதுமான அளவில் இருக்கிறது என்றும் சில இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று கிரண்பேடி கூறியுள்ளார்.

English summary
How Puducherry is safe at night LT. governor Kiranbedi took night visit and tweeted the result that Puducherry is safe for girls at night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X