போற போக்கைப் பார்த்தா.. நாமளும் இப்படித்தான் அலையனும் போல!

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க சூப்பர் ஐடியா தரும் வீடியோ இது. வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பருவமழை பொய்த்ததால் வெப்பத்தை தணிக்க என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று புதுசு புதுசாக ரூம் போட்டு யோசிப்பாங்களோ. இந்த வீடியோவை பாரூங்க புரியும்.

தமிழகம் முழுவதும் வெப்பம் தகித்து வருவதால் மக்கள் வெளியே தலை காட்ட முடியவில்லை. இதனால் மாலை நேரம் வரை வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். போக போக அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் வேற எச்சரிக்கை விடுத்து வருவதால் வெளியே போகவே சற்று அச்சமாகதான் உள்ளது.

என்ன செய்வது? வெயிலிருந்து தற்காத்து கொள்ள சாலையில் செல்வோர் குடை, துணி, தொப்பி இவற்றை அணிந்து செல்வதை பார்த்திருப்பீர்கள். ஆனால் ஆப்பிரிக்க நாட்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இருவர் சாலையில் அமர்ந்து வெப்பத்தை தணிக்க விசிறி கொண்டிருக்கின்றனர். அதை விடக் காமெடி அடுத்து வரும் காட்சிகள்.!

நீங்களே பாருங்க அந்தக் கூத்தை.. போற போக்கை பார்த்தா, நாமளும் இதுபோல்தான் செல்ல வேண்டும் போல.

English summary
A funny video which goes viral in social media says how to tackle from heat.
Please Wait while comments are loading...