For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினியைத் தடுக்க திமுக - அதிமுக சேர்ந்துருமாம் :... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா நம்மாளுங்க!

Google Oneindia Tamil News

சென்னை: பேஸ்புக் பக்கம் ஒரு ரவுண்டு அடித்து விட்டு வந்தால் போதும் நீங்கள் அரசியலில் பெரிய நிபுணர் ஆகி விடுவீர்கள். அந்த அளவுக்கு படு பாஸ்ட்டாக "திங்க்" செய்பவர்கள் நிறைய பேர் "இங்க்" தீரத் தீர அரசியலை அலசிக் கொண்டிருக்கிறார்கள்.

சில அரசியல் ஆய்வுகளைப் பார்க்கும்போது ஓஹோ. இப்படியெல்லாம் கூட நடந்தாலும் நடக்குமோ என்று சீரியஸாகவே நம்மை யோசிக்க வைப்பதாக உள்ளது.

அப்படித்தான் இப்போது ஒரு அரசியல் போஸ்ட் நமது கண்ணில் பட்டது.. அந்த போஸ்ட் இதுதான்

How these FB wallahs are thinking, see!

"ரஜினியை அரசியலுக்கு அழைத்துக் கொண்டு இருக்கிறது பாரதிய ஜனதா. ஜெயலலிதா சிறையில் இருக்கும் இந்த வேளையை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. ரஜினி மட்டும் வருகிறேன் என்று சொல்லி விட்டால் அடுத்த நாளே இங்கே ஒரு பெரிய மோதலை நிகழ்த்தி, அதே வாரத்தில் ஆட்சியை கலைத்துவிட்டு , ரஜினியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தலை நடத்தி ஆட்சியை பிடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

இப்படி ஒன்று நடந்தால், ரஜினி ஜெயித்து விட்டால் ஒரு 20 வருடம் அரசியலில் இருப்பார். இதனால் அடுத்து முதல்வராகி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலபேரின் நினைப்பு மொத்தமாக அம்பேலாகி விடுவார்கள். மு.க. ஸ்டாலினின் நினைப்பு தூரத்தில் ஒரு புள்ளியாகி பின் கரைந்தே போய் விடும். விஜயகாந்த் பணால். அன்புமணி ராமதாஸ் பணால். இரண்டே கட்சிகள் தான் இருக்கும். அதிமுகவும், ரஜினி கட்சியும்.

ரஜினியை முதல்முறையிலேயே தோற்கடித்து விட்டால் புறமுதுகிட்டு ஓடி விடுவார். அதை செய்ய வேண்டுமானால் அதிமுகவும் திமுகவும் இணைந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். இரண்டு திராவிடக் கட்சிகளும் இணைந்து ஆரிய படையெடுப்பை தடுத்தாக வேண்டிய நிலை வரும். ரஜினி ஓடிய பிறகு திரும்பவும் திராவிடக் கட்சிகள் மீண்டும் இரண்டாகி விடும். இப்படிதான் நடக்கும்!"

எப்பூடி....!

English summary
FB is full of political analysis nowadays. See this one sample.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X