For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் அம்மா இடத்தில் சசிகலா- வைரலாகும் ஜெ. வீடியோ பேட்டி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தாம் ஆண்களை ஒருபோதும் வெறுக்கவில்லை என்றும் என்னுடைய அம்மாவின் இடத்தில்தான் சசிகலா இருக்கிறார் என்றும் முதல்வர் ஜெயலலிதா அளித்த வீடியோ பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

1999-ம் ஆண்டு நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான சிமி கரேவலுக்கு முதல்வர் ஜெயலலிதா விரிவான பேட்டியளித்திருந்தார். அதில் தம்முடைய இளம் வயது, எம்.ஜி.ஆர் பற்றி விரிவாக வெளிப்படையாகவே பேசியிருந்தார்.

அதேபோல எம்ஜிஆர் மறைவுக்கு பிந்தைய காலத்தில் எதிர்கொண்ட சவால்கள், சசிகலா நடராஜன் குறித்த விமர்சனங்கள், சட்டசபையில் தாம் தாக்கப்பட்ட விவகாரம் என பலவற்றையும் உணர்வுப் பூர்வமாக பேசியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். தமக்கான அரசியல் எதிர்காலத்தை அவ்வளவு எளிதானதாக உருவாக்கி வைத்துவிட்டுப் போகவில்லை; தென்னாசியாவில் மற்ற அரசியல் வாரிசுகளுக்கு கிடைத்த இடம் உடனே எனக்குக் கிடைத்துவிடவில்லை என மனம் திறந்துள்ளார் ஜெயலலிதா.

திருமணக் கனவுகள் தமக்கு இளமை காலத்தில் இருந்தது என்றும் பின்னர் அதை பற்றிய சிந்தனையே இல்லை எனவும் விவரித்திருக்கிறார். தாம் ஒருபோதும் ஆண்களை வெறுக்கவில்லை என்றும் சசிகலா நடராஜனுக்கு எதற்காக இந்த முக்கியத்துவம் என்பது குறித்தும் இந்த பேட்டியில் விவரிக்கிறார் ஜெயலலிதா.

அதுவும் தம்முடைய அம்மா இருந்தால் எப்படி அவரை சார்ந்திருப்பேனோ அந்த இடத்தில் தற்போது சசிகலா நடராஜன் இருக்கிறார் என குறிப்பிட்டுச் சொல்லும் இந்த வீடியோவை இன்றைய தலைமுறை சமூக வலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறது.

சிமி கரேவலுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:

English summary
Tamilnadu CM Jayalalithaa said an interview to Simi Garewal, "I am not a Man Hatter" in 1999. Now Jayalalithaa's that video going viral in Social medias.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X