பெப்சி, கோக் நிறுவனங்கள் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க அனுமதிக்க மாட்டோம்.. வசந்தகுமார் அதிரடி

தாமிரபரணியில் இருந்து பன்னாட்டு குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுப்பதை ஒரு காலமும் ஏற்கமுடியாது என்று நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி : தாமிரபரணியில் இருந்து பன்னாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை ஒரு காலமும் ஏற்கமுடியாது என்று நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கூறியுள்ளார். மேலும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருநெல்வேலியில் செய்தியாளர்கள் சந்தித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்து பணிகளுக்காக நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதிகளில் மினரல் ஆலைகளின் மூலம் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்

I never accept of water supply for Pepsi, Coke, says Vasanthakumar

மேலும் ஆர். கே நகர் இடைதேர்தலில் திமுக அமோக வெற்றிபெறும். திருநெல்வேலியில் குடிநீர் பிரச்சனை இருந்து வரும் சூழலில் பன்னாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கியதை ஒரு காலமும் ஏற்று கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

English summary
Vasanthakumar , Nanguneri MLA says that he nerver accept of water supply for Pepsi,coke companies from Tamirabarani river. He also says that DMK should win in the RK nagar by election .
Please Wait while comments are loading...