For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனிக்கட்சி தொடக்கம்.. கூட்டணியா, தனித்து போட்டியா? கமல் கூறியது இதுதான்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை என்றும், தனிக் கட்சிதான் துவங்கப்போகிறேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக டிவிட்ரிலும், பொது வெளியிலும், கமல் தொடர்ச்சியாக அரசியல் குறித்து பேசிவருகிறார். இந்த நிலையில் வெப்சைட் ஒன்றுக்கு சில தினங்கள் முன்பு பேட்டியளித்த கமல், தான் தனிக்கட்சி துவங்கப்போதாக கூறியிருந்தார்.

நேற்று இதேபோல டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், எந்த ஒரு கட்சியிலும் இணைந்து செயல்பட விரும்பவில்லை. நான் தனியாகத்தான் செயல்பட விரும்புகிறேன். அனைத்து கட்சிகளுடனும் இணக்கம் காட்டலாம், ஆனால் தனியாகத்தான் செயல்பட போகிறேன் என்றார்.

தனிக்கட்சி உறுதி

தனிக்கட்சி உறுதி

கமல் தனிக்கட்சி துவங்குவதை மீண்டும் இந்த பேட்டி உறுதி செய்துள்ளது. தனிக்கட்சி துவங்கினாலும் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராக இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அனைத்து கட்சிகளுடனும் இணக்கம் காட்டலாம் என்று அவர் கூறியுள்ளது அந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கூட்டணியை தவிர்ப்பாரா?

கூட்டணியை தவிர்ப்பாரா?

அதேநேரம் தான் தனியாக செயல்பட விரும்புகிறேன் என்று கமல் கூறியுள்ளதன் மூலம், அவர் கூட்டணியை தவிர்ப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கூட்டணியை தவிர்க்கவே அவரது ரசிகர்கள் விரும்புகிறார்களாம்.

விஜயகாந்த் கட்சி

விஜயகாந்த் கட்சி

நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை ஆரம்பித்தபோது தனித்து போட்டியிட்டார். ஆண்டவனோடும், மக்களோடும்தான் கூட்டணி என்றார். அந்த கட்சியின் செல்வாக்கு வேகமாக கூடத்தொடங்கியது.

வாக்கு வங்கி வாக்கு வங்கி

வாக்கு வங்கி வாக்கு வங்கி

விஜயகாந்த் முதலில் அதிமுக பிறகு பாஜக, அதன்பிறகு மக்கள் நல கூட்டணி என கூட்டணிகளை அமைத்து தேர்தலை சந்திக்க தொடங்கிய பிறகு தேமுதிக வாக்கு வங்கி சரிவடைய தொடங்கியது. இதை கமல் ரசிகர்கள் அவரிடம் சுட்டிக்காட்டி வருவதால் கமல் தனித்தே செயல்பட திட்டமிட்டிருப்பார் என்று தெரிகிறது.

English summary
"I am not going to do business with any of them. I will go alone," Kamal said in an interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X