For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் டூ சென்னை.. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ஓடோடி வந்த "சூப்பர் ஹெர்குலஸ்"

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப் படையின் விமானங்களான சி-17 மற்றும் சி-130 ஜே போன்றவற்றின் பங்கு இன்றியமையாதது.

கனமழை காரணமாக சென்னையில் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது. படகுகள் மூலம் வீடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். ஆனால், வெள்ளத்தில் சிக்கியவர்களை நீரில் படகு மூலம் சென்று மீட்பது சற்று சவாலானதாகவே இருந்தது.

IAF's C-17, C-130J Super Hercules: Giants saving lives from Kashmir to Chennai

அப்போது தான் தக்க சமயத்தில் மீட்புப் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் இணைந்தனர். இவர்கள் இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் மூலம் வானில் பறந்தபடி வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டனர். கூடவே உணவுப் பொட்டலங்கள், குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய உதவிகளையும் வானில் பறந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தனர்.

அமெரிக்கத் தயாரிப்பு...

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்திய விமானப் படையில் சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் சரக்கு விமானம், சி-17 குளோப் மாஸ்டர் சரக்கு விமானம் உள்ளிட்டவை இணைக்கப் பட்டன. இதில் சி 130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானம் அமெரிக்கத் தயாரிப்பு ஆகும்.

சிறப்பம்சம்...

ராணுவப் போக்குவரத்துக்கு பயன்படும் இந்த விமானம் 20 டன் எடை வரை எடுத்துச் செல்லும் திறனுடையது. 4 இன்ஜின்கள் உள்ள இந்த விமானத்தை, சிறிய ஓடுதளங்களிலும், சற்று கரடுமுரடான இடங்களிலும் கூட தரையிறக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

பேரிடர் சமயங்களில்...

சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர் சம்பவங்களான உத்தரகாண்ட், காஷ்மீர் வெள்ளம், நேபாள நிலநடுக்கம் உள்ளிட்டவற்றின் மீட்புப் பணியில் இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை வெள்ளத்தில் சிக்கிய 1500க்கும் மேற்பட்டவர்களை மீட்டு அளப்பரிய பணி செய்துள்ளன இந்த விமானங்கள்.

மீட்புப் பணி...

இந்த விமானங்கள் மூலம் வானில் பறந்தபடி வெள்ளத்தில் சிக்கியவர்களை கழுகு பார்வையில் காண முடிந்தது. பின்னர் படகுகள் மூலம் மீட்க முடியாதவர்கள் மற்றும் அவசர உதவிகள் தேவைப்பட்டோரை இந்த விமானங்கள் மூலம் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

கர்ப்பிணிகள்...

சென்னை கிண்டி, ராமாவரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய 4க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளை மீட்டு, அவர்களைப் பத்திரமாக மருத்துவமனையில் சேர்க்க இந்த விமானங்கள் பெரிதும் உதவின என்பது குறிப்பிடத்தக்கது.

சல்யூட் செய்வோம் இந்த ஹெர்குலஸுக்கு!

English summary
Chennai: Heavylifter C-17 Globemaster and the C-130J Super Hercules, which helped in saving thousands of lives during the Uttarakhand and Kashmir floods and the deadly Nepal earthquake early this year, again did yeoman service in rain-hit Chennai where they ferried nearly 1,500 people to safety following the deluge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X