For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி அரசியலுக்கு வந்தால், நண்பனாக ஆதரிப்பேன்: திருமாவளவன்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதை வரவேற்கும் என்று அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், நண்பனாக ஆதரிப்பேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி அவரது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள இருக்கிறார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். இதில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கலந்துகொண்டு பேசினார். முதல் கட்டமாக 5 நாட்கள் 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்திக்கிறார். தினமும் 3 மாவட்டங்கள் வீதம் 5 நாட்களில் 15 மாவட்ட ரசிகர்களை சந்திக்க சூப்பர் ஸ்டார் ரஜினி திட்டமிட்டுள்ளார்.

If rajinikanth will come to politics we will support him, Thirumavalavan

முதல்கட்டமாக இன்று நடந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, அரசியலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகே கூட சேர்க்கமாட்டேன் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறினார்.

இதனையடுத்து ரஜினிகாந்தின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், நண்பனாக ஆதரிப்பேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவர் விருப்பம். பாஜக அவரை வைத்து தமிழகத்தில் காலூன்றத் துடிக்கிறது. அவர் அரசியலுக்கு வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதை வரவேற்கும் என்று கூறினார்.

English summary
If rajinikanth will come to politics we will support him, says VCK leader Thol.Thirumavalavan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X