விவசாயிகளுக்காக வந்து விட்டது புதிய மொபைல் ஆப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நம் நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நிறைய தொழில் நுட்பங்கள் இருக்கு. அந்த வரிசையில் இந்த பகுதியில் நாம் படிக்க இருப்பது மொபைல் தொழில் நுட்பம். மொபைல் தொழில் நுட்பத்தை வைத்து விவசாய மேம்பாட்டை செய்யும் நிறுவனம் தான் இப்கோ உழவர் தொலைதொடர்பு நிறுவனம்.

இந்தியன் பார்மர்ஸ் பெர்டிலைசர் கோ-ஆபரேடிவ் லிமிடெட் என்ற இப்கோ நிறுவனம் 1967ல் பல்வேறு யூனிட்டுகளைக் கொண்ட கூட்டுறவு அமைப்பாக நிறுவப்பட்டது. உரங்களை தயாரிப்பது மற்றும் அவற்றை பல இடங்களுக்கும் அனுப்பி விற்பனை செய்வதை முதன்மையாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின்கீழ் 16 துணை நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் இப்கோ உழவர் தொலை தொடர்பு நிறுவனம். இந்நிறுவனத்தின் மூலம் இரண்டு சேவைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அவை. 1. இலவச வாய்வழி செய்தி, 2. இப்கோ கிஸான் மொபைல் அப்ளிகேசன

1.இலவச வாய்வழி செய்தி:

விவசாயிகளுக்கு தேவையானா அனைத்து தகவல்களையும் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம் ஆகும் இதற்காக ஏர்டெல் நெட்வொர்க்கை பயன்படுத்தியுள்ளோம்.

தினமும் இரண்டு அல்லது மூன்று குரல் வழி செய்தியை வழங்குகிறோம். அவை பயிர்சாகுபடி / பயிர்பாதுகாப்பு, கால்நடைவளர்ப்பு, மண்மேலாண்மை, விவசாயபொருட்களின் சந்தைநிலவரம், வானிலை முன்னறிவிப்பு, அரசுதிட்டங்கள், மானியங்கள், உடல்நலம், வேலைவாய்ப்பு பற்றிய அனைத்து தகவல்களையும் முற்றிலும் இலவசமாக, வாழ்நாள் முழுவதும் வழங்குகின்றோம்.

IFFCO Mobile app for farmers

கேட்கதவறிய செய்திகளை மீண்டும் கேட்பதற்கு 53435 என்ற எண்ணை அழைத்தால், திரும்ப செய்திகளை கேட்கலாம்.

விவசாயம் மற்றும் கால்நடை சம்மந்தப்பட்ட சந்தேகங்களை கேட்க 534351 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்

2. இப்கோ கிஸான் மொபைல் அப்ளிகேசன்:

முதல் முறையாக பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் ஆடுமாடுகளை புகைப்படம் எடுத்து அனுப்பி தீர்வு பெரும் வசதி

"இப்கோ கிசான்" மொபைல் அப்ளிகேசன் பயன்பாடு கிராமிய மக்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இதில் வானிலை, மண்டிவிலை, சமீபத்திய விவசாய ஆலோசனை, எங்கள் நிபுணர் பகுதி, சிறந்த நடைமுறைகள் நூலகம், நிபுணர்ஆலோசனை, சமீபத்திய செய்தி மற்றும் இன்னும் பல வழங்குகிறது. இதில் உள்ள தகவல்களை , இந்தி, பஞ்சாபி, மலையாளம், பெங்காலி, ஒரியா, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், குஜராத்தி போன்ற பதினொரு இந்திய மொழிகளில் படிக்கும் வசதியிலும் மற்றும் குறைந்த படிப்பறிவு உள்ள மக்களின் வசதிக்காக ஆடியோ வசதியிலும் உள்ளது.

IFFCO Mobile app for farmers

வேறு எந்த விவசாய அப்ளிகேசன்கலிலும் இல்லாத சிறப்பு என்னவெனில், விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள அனைத்து பயிர் சாகுபடி பற்றிய தகவல்கள், வானிலை முன்னறிவிப்பு, மண்டி விலை, கால்நடை வளர்ப்பு, சந்தை, சமீபத்திய செய்திகள், நிபுணர் பகுதி போன்ற அனைத்தும் ஒரே அப்ளிகேசனில் பெறலாம்.

இதில் மிக முக்கியமாக குறிப்பிடத்தக்கவை 1).நிபுணர் பகுதியில் சந்தேகங்களை நிபுணர்கள் குழுவுக்கு அனுப்பமுடியும். கேள்விகளை எழுத முடியாதவர்கள், பாதிக்கப்பட்ட பயிர்களை / பாதிக்கப்பட்ட கால்நடைகளை புகைப்படம் எடுத்து அனுப்பலாம். நிபுணர்கள் நீங்கள் அனுப்பிய புகைபடத்திற்க்கான தீர்வை உடனடியாக வழங்குவர்.

2) சந்தை பகுதியில் - விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை தங்கள் விரும்பிய விலையில் விற்கலாம். மற்றும் வாங்கலாம்.
கியான் பந்தர் - ஒரு பயிர் சாகுபடி பற்றி விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.
வானிலை - ஒரே நேரத்தில் இரண்டு மாவட்டத்திற்கான, 5 நாட்கள் வானிலை முன்னறிவிப்பை அறிந்து கொள்ளமுடியும். வானிலை முன்னறிவிப்பின் தகவலறிந்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மண்டி - ஒரே நேரத்தில், ஐந்துவிளை பொருட்களின் விலையை ஐந்து மண்டிகளில் இருந்து பெற முடியும்.விவசாயிகள்சந்தைவிலைநிலையை பொறுத்து தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான ஒருமுடிவைஎடுக்கமுடியும்.

செய்தி-கிராமப்புற இந்தியா, விவசாயம் தொடர்புடைய விஷயங்கள், சமூகநலம், வேலை வாய்ப்பு, அரசாங்க திட்டங்கள் மற்றும் அரசு மானியங்கள் மற்றும் இன்னும் பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு பயன்பாடுகள் உள்ள அப்ளிகேஷனை உங்கள் ஆன்ராய்டு மொபைலில் இலவசமாக டவுன்லோட் செய்ய, Google Play store-ல் "IFFCO KISAN"என்று டைப் செய்து டவுன்லோட் செய்து Ref.Code இடத்தில் 2201 என்று டைப் செய்து, உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இப்கோ கிஸான் வழங்கும் இந்த சேவைகளை பெற விரும்பினாலோ அல்லது இதை பற்றின சந்தேகங்கள் இருந்தாலோ அணுக வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி எண் -

இப்கோ உழவர் தொலைதொடர்பு நிறுவனம்,
எண்.91,தூய மேரி சாலை, அபிராமிபுரம், சென்னை-18
தொ.எண் - 9791735144,534351

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IFFCO has introduced a Mobile app for farmers.
Please Wait while comments are loading...