For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரவமே இல்லாமல் அலையோடு அலையாக அடித்துச் செல்லப்பட்ட பாரிவேந்தரின் ஐஜேகே!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அமைதியாக அரவமற்றுப் போன கட்சிகளில் இந்திய ஜனநாயகக் கட்சியும் ஒன்று.

போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட டெபாசிட் பெறவில்லை என்பதுடன் அக்கட்சியின் எந்த வேட்பாளரும் 5000 ஓட்டுக்களைத் தாண்டவில்லை என்பதுதான் மிக முக்கியமானது.

பெரும்பாலான வேட்பாளர்கள் ஆயிரத்துக்கு கீழ்தான் வாங்கியுள்ளனர். சிலர்தான் ஆயிரத்தை தாண்டியுள்ளனர். அதிலும் ஒருவர்தான் 4000 அல்லது அதற்கு மேல் போயுள்ளனர்.

கத்திரிக்கோல்

கத்திரிக்கோல்

கத்திரிக்கோல் சின்னத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது இந்திய ஜனநாயகக் கட்சி. பாரிவேந்தர் தலைமையலான இக்கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து 45 இடங்களில் களம் கண்டது.

பாரிவேந்தர் போட்டியில்லை

பாரிவேந்தர் போட்டியில்லை

தேர்தலில் பாரிவேந்தர் மட்டும் விவரமாக போட்டியிடாமல் கழன்று கொண்டார். தனது வேட்பாளர்களை 45 தொகுதிகளிலும் களம் இறக்கினார். ஆனால் எல்லாப் பேரும் மண்ணைக் கவ்வி விட்டனர்.

அதிகபட்சம் இவர்தான்

அதிகபட்சம் இவர்தான்

இந்த வேட்பாளர்களில் அதிகபட்சமாக மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட அனந்தப்பிரியாதான் 4582 வாக்குகளைப் பெற்றார். இவர் ஒருவர்தான் 4000 வாக்குகளுக்கு மேல் பெற்ற ஒரே வேட்பாளர் என்பது இந்திய ஜனநாயகக் கட்சியின் வரலாற்றில் பெரும் சாதனையாகும்.

ஆயிரத்திற்கு மேல் 13

ஆயிரத்திற்கு மேல் 13

ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கியோர் எண்ணிக்கை 13 பேர்தான். அதில் அதிகம் வாங்கியவர் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட செல்லத்துரை. அவர் வாங்கிய வாக்ககுள் 1747 ஆகும். குறைவாக வாங்கியவர் ஓமலூர் கோவிந்தராஜ், பெற்ர வாக்குகள் 1030.

1000க்குக் கீ்ழ் 30 பேர்

1000க்குக் கீ்ழ் 30 பேர்

1000 ஓட்டுக்களைக் கூட வாங்க முடியாமல் தட்டுத் தடுமாறி தவிடுபொடியான வேட்பாளர்கள் எண்ணிக்கை மட்டும் 30 ஆகும். இவர்களை விட சுயேச்சை வேட்பாளர்கள் பலர் அதிக வாக்குகளைப் பெற்றதையும் காண முடிந்தது.

திட்டக்குடி கலையரசன்

திட்டக்குடி கலையரசன்

இருப்பதிலேயே மிகவும் குறைவான வாக்குகளைப் பெற்ற சாதனையாளர் திட்டக்குடி வேட்பாளர் கலையரசன்தான். வெறும் 281 வாக்குகளைத்தான் இவர் பெற்றுள்ளார். அதேபோல உளுந்தூர்ப்பேட்டை ராஜேந்திரன் என்பவர் 293 வாக்குகள் பெற்று கலையரசனுக்குக் கம்பெனி கொடுத்துள்ளார்.

English summary
Pariventhar led IJK party has lost like anything in the assembly election. All the candidates of the party have not only lost the deposit but they could not cross 1000 votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X