For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருநாவுக்கரசர் பாஜகவில் இருந்திருந்தால் பிரதமர் ஆகி இருப்பாரா? இளங்கோவன் சாடல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஈரோடு: காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நான் அதிகவில் இப்போது இருந்திருந்தால் முதல்வர் ஆகி இருப்பேன் என்கிறார். அப்படியானால் பா.ஜ.க.வுடன் இருந்திருந்தால் பிரதமர் ஆகி இருப்பாரா? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரி 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கல் விடுமுறை ரத்து -ஜனவரி 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் -கி.வீரமணி அறிவிப்பு பொங்கலுக்கு விடுமுறை மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஜனவரி 12ஆம் தேதி தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதச்சார்பற்ற விழாவான பொங்கல் விழாவிற்கு இதுவரை இருந்துவந்த மத்திய அரசு விடுமுறையை ரத்து செய்து, வேண்டுமானால் தேவைப்படுவோர் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழர் பண்பாட்டின் மீது திணிக்கப்படும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே இது. மத்திய அரசின் இந்துத்துவா கொள்கையின் இன்னொரு வகை திணிப்பும் ஆகும். உடனடியாக மத்திய அரசு இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் வரும் 12ஆம் தேதி தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என்று அறிவிக்கிறோம். ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்பதே எங்களின் நிலைப்பாடு. இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திங்கள்கிழமை போராட்டம் நடத்தும் போக்குவரத்து ஊழியர்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இங்கு போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது. இதனை தமிழக அரசு உடனே ஏற்க வேண்டும், வறட்சியின் பிடியில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். ஏற்கனவே ஒரு போக்குவரத்து ஊழியர் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். ஆகவே போக்குவரத்து ஊழியர்களுக்கும் அந்த நிலை வந்து விடக்கூடாது. முதல் அமைச்சர் தலையிட்டு சுமூக முடிவு எடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு பணி எண் உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுததி வருகிறார்கள். ஆனால் ஒரு அமைச்சர் அது தேவையில்லை என்று கூறி உள்ளார். அவர் பேச்சு எந்த வகையில் நியாயம்? அவர் பேச்சு பொருப்பற்ற பேச்சாக உள்ளது.

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நான் அ.தி.மு.க.வில் இப்போது இருந்திருந்தால் முதல்வர் ஆகி இருப்பேன் என்கிறார். இது அவரது தனிப்பட்ட கருத்து. அப்படியானால் பாரதிய ஜனதாவுடன் இருந்திருந்தால் திருநாவுக்கரசர் பிரதமர் ஆகி இருப்பாரா?.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

English summary
EVKS Ilangovan tease speech about State congress party leader Thirnavukarasar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X