கோவை மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... காரணம் என்ன? - வீடியோ

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையிலுள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது இன்று காலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

சமீபகாலமாக மார்க்சிஸ்டுகள் மேல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இன்று காலை 6 மணியளவில் கோவையில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட குழு அலுவலகத்தின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டி வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

In coimbatore Marxist office been attacked by unknown persons

அதில் அங்கு நின்றுகொண்டிருந்த கார் ஒன்று சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. கோவை காந்திபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 10நாட்களுக்கு முன்பு தேபோல் கன்னியாகுமரியில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பாஜகவின் மாட்டுக்கறி தடை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என மார்க்சிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
In coimbatore Marxist office been attacked by unknown person by throwing petrol bomb. Fortunately no one get injured.
Please Wait while comments are loading...