பெற்றோர் எதிர்ப்பு.. ஒரே அறையில் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி.. சென்னையில் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ஒரே அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மடிப்பாக்கம் செந்தூரர் காலனியை சேர்ந்த முருகள் என்பவர் ரயில்வே அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி தலைமை செயலகத்தில் அதிகாரியாக உள்ளார்.

இவர்களது 17 வயது மகள் சங்கீர்த்தனா மேடவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாண்டு படித்து வந்தார். சங்கீர்த்தனா நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவியை காதலித்து வந்துள்ளார்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு

அவர்களது காதல் விவகாரம் சங்கீர்த்தனாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் காதலை கைவிடுமாறு கண்டித்துள்ளனர்.

தொடர்பு கொண்ட தாய்

தொடர்பு கொண்ட தாய்

இந்நிலையில், நேற்று காலை முருகன் மற்றும் லட்சுமி ஆகியோர் வேலைக்கு சென்றனர். மாலையில் லட்சுமி சங்கீர்த்தனாவை செல்போனில் தொடர்பு கொண்டார்.

உள்பக்கமாக தாழ்

உள்பக்கமாக தாழ்

ஆனால் அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த லட்சுமி, பக்கத்து வீட்டுக்கு போன் செய்து தனது மகளை அழைக்கும்படி கூறினார். அதன்படி அவர்கள், அங்கு சென்றபோது, கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.

ஒரே கயிற்றில் தூக்கு

ஒரே கயிற்றில் தூக்கு

இதையடுத்து நீண்ட நேரம் கதவை தட்டிய அவர்கள் கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர். அப்போது சங்கீர்த்தனா இளைஞர் ஒருவருடன் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடல்களை கைப்பற்றிய போலீஸ்

உடல்களை கைப்பற்றிய போலீஸ்

இதையடுத்து மடிப்பாக்கம் போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மடிப்பாக்கம் பகுதியில் அதிர்ச்சி

மடிப்பாக்கம் பகுதியில் அதிர்ச்சி

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி ஒரே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Lovers stage road roko Kambam | உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி சாலை மறியல் - Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
In Madippakam lovers committed suicide. They hanged themselves in a same rope for parents not accepting their love. police inquiry.
Please Wait while comments are loading...