For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரங்களை வெட்டிப்போட்டு சாலைகளில் தடை... மதுரை மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

மதுரை மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் சாலைகளில் பெரிய பெரிய மரங்களை வெட்டிப் போட்டு தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் நகர் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நகரின் முக்கியப் பகுதிகள் முழுவதும் சாலைகளில் பெரிய பெரிய மரங்களை வெட்டிப் போட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் கொண்டு வர வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தீவிரப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்றுப் பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டத்தை ஏற்க மறுத்த போராட்டக்குழுவினர் இன்று அலங்காநல்லூரில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

In Madurai people blocking road by keeping big stones

இதனால் அலங்காநல்லூரில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டது. போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் பொதுமக்கள் மதுரை மாநகரின் முக்கியப் பகுதிகளில் சாலைகளின் நடுவே பெரிய கற்களை வைத்துள்ளனர்.

பெரிய பெரிய மரங்களையும் சாலைகளில் வெட்டிப் போட்டு தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மாநகர் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

English summary
In Madurai people blocking road by keeping big stones and tree branches on the road. Because of this transport affected heavily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X