For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினியை எதிர்த்து அரசியல் செய்தாலும் என் எதிரி அல்ல: கமல்ஹாசன் ஓபன் டாக்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினி என் எதிரி அல்ல: கமல்ஹாசன் ஓபன் டாக்-வீடியோ

    சென்னை: ரஜினியும், நானும் அரசியலில் நல்ல உதாரணங்களாக இருப்போம் என்று நடிகர் கமல் தெரிவித்தார். எதிர்த்து அரசியல் செய்தாலும் எதிரிகளாக இருக்க மாட்டோம் என்றார் அவர்.

    கமல் நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் சந்தித்தார். இதன்பிறகு இரவு சில ஆங்கில டிவி சேனல்கள் அவரை பேட்டி கண்டன.

    டைம்ஸ் நவ் தலைமை எடிட்டரும் கமலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சில அரசியல் திட்டங்களை மனம்விட்டு வெளிப்படுத்தினார் கமல்.

    கட்டாய திருமணம் நடந்துவிட்டது

    கட்டாய திருமணம் நடந்துவிட்டது

    அதிமுகவில் நடைபெறும் தகராறுகளையும், சட்டசபை தேர்தலுக்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து கமல் கூறியதாவது: இது ஒரு கட்டாய திருமணம். இந்த கட்டாய திருமணத்தில் மணமகள், தமிழக மக்கள்தான். இந்த திருமணத்திலிருந்து வெளியேற மக்கள் விரும்புகிறார்கள். இன்னும் 100 நாட்களில் தேர்தல் நடைபெறுமானால், நான் களத்தில் இருப்பேன் என்றார்.

    ரஜினியை சந்தித்தேன்

    ரஜினியை சந்தித்தேன்

    ரஜினியின் அரசியல் ஈடுபாடு குறித்த கேள்விக்கு கமல் பதிலளிக்கையில், நான், நாலைந்து வாரங்கள் முன்பாக ரஜினியை சந்தித்தேன். நாங்கள் இருவருமே இணைந்து பணி புரிந்துள்ளோம். அவருடன் பேச எனக்கு விஷயங்கள் இருந்தன.

    குறிக்கோள் ஒன்றுதான்

    குறிக்கோள் ஒன்றுதான்

    ரஜினிக்கும், எனக்கும் ஒரே மாதிரியான குறிக்கோள்தான் உள்ளது. முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அந்த நோக்கம். ஆனால் நான் வேறு வழியில் அதை செய்வேன். ரஜினி வேறு வழியில் போகிறார். எங்கள் சந்திப்பின்போது அதுகுறித்து விரிவாக பேசவில்லை. எனவே இருவருக்கும் எந்த கருத்துவேறுபாடும் எழவில்லை. நான் ரஜினியை கட்டியணைத்தபடியே அவரிடம் கூறினேன், "நான் உள்ளே (அரசியலுக்குள்) போகிறேன்".

    முன்உதாரணமாக இருப்போம்

    முன்உதாரணமாக இருப்போம்

    நாங்கள் இருவருமே உதாரணத்தை ஏற்படுத்துவோராக இருக்க விரும்புகிறோம். நாங்கள் சினிமா துறையில் போட்டியாளர்களாக இருந்தோம். ஆனால், அரசியலில் நாங்கள் நல்ல உதாரணங்களை ஏற்படுத்த விரும்புகிறோம். நான் ரஜினி மீது சேற்றை வாரி இறைப்பதை செய்யப்போவதில்லை, அவரும் அப்படித்தான்.

    English summary
    We have been in the cinema field as competitors, but in politics we want to set an example. I will not take pot shots at him, he will also do the same," Kamal said in an Interview.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X