For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

33 அமைச்சர்களில் 6 பேர் மட்டுமே "லட்சாதிபதி ஏழைகள்"... மற்ற 27 பேரும் கோடீஸ்வரக் குபேரர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக அளவிலான கோடீஸ்வரர்களைக் கொண்ட முதல் அமைச்சரவை ஜெயலலிதா

தலைமயிலான தற்போதைய அமைச்சரவைதான். அதாவது மொத்தம் உள்ள 33 அமைச்சர்களில் 27 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். மற்ற 6 பேரும் லட்சாதிபதிகள் ஆவர்.

அமைச்சர்களில் யாருமே சாதாரணர்கள் இல்லை. எல்லாமே பெரிய பெரிய பணக்காரர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்களிலேயே மிகவும் இளம்

வயதான சங்கரன்கோவில் ராஜலட்சுமிக்குக் கூட கிட்டத்தட்ட ரூ. 60 லட்சம் அளவில் சொத்து உள்ளது.

ஜெயலலிதா அமைச்சரவை, அதிமுக அமைச்சரவை, தமிழக அமைச்சரவை என்று சொல்வதற்குப் பதில் பேசாமல் குபேர அமைச்சரவை என்று செல்லமாக கூப்பிடலாம். அந்த அளவுக்கு பணக்காரர்களாலும், பெரும் பணக்காரர்களாலும் நிரம்பி வழிகிறது தமிழக அமைச்சரவை.

தமிழக அமைச்சரவை மட்டுமல்ல, சட்டசபையும் கூட இந்த முறை பெரும் பெரும் கோடீஸ்வரர்களால் நிரம்பியிருக்கிறது. பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் தமிழகத்தின் சட்டசபை உறுப்பினர்களாக உருவெடுத்துள்ளனர்.

33 அமைச்சர்கள்

33 அமைச்சர்கள்

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா உள்பட மொத்தம் 33 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 27 பேர் பெரும் கோடீஸ்வரர்கள் ஆவர்.

6 லட்சாதிபதிகள்

6 லட்சாதிபதிகள்

6 அமைச்சர்கள் மட்டுமே லட்சாதிபதிகளாக உள்ளனர். அவர்களும் கூட கிட்டத்தட்ட கோடீஸ்வரர்கள் நிலையில்தான் உள்ளனர். அமைச்சர் பதவியிலிருந்து இறங்குவதற்குள் இவர்களும் பெரிய கோடீஸ்வரர்களாகி விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

8 பேர் கிரிமினல் பின்னணி

8 பேர் கிரிமினல் பின்னணி

அமைச்சர்களில் 8 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் மீது சீரியஸான வழக்குகள் உள்ளன. கொலை முயற்சி, ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியது போன்ற வழக்குகள் இவர்கள் மீது உள்ளன.

சராசரி சொத்து மதிப்பு ரூ. 8.55 கோடி

சராசரி சொத்து மதிப்பு ரூ. 8.55 கோடி

தமிழக அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 8.55 கோடியாக உள்ளது. 27 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் ஆவர்.

ஒரு அமைச்சரிடம் பான் கார்டு இல்லை

ஒரு அமைச்சரிடம் பான் கார்டு இல்லை

தமிழக அமைச்சரவையில் ஒரே ஒரு அமைச்சரிடம் மட்டுமே பான் கார்டு விவரம் இல்லை. அவர் சங்கரன்கோவில் வி.எம்.ராஜலட்சுமி. இவர்தான் அமைச்சர்களிலேயே மிகவும் ஜூனியர். இவரது சொத்து மதிப்பு ரூ. 60 லட்சமாகும்.

பெரிய பணக்காரர் ஜெயலலிதாதான்

பெரிய பணக்காரர் ஜெயலலிதாதான்

அமைச்சர்களிலேயே பெரிய பணக்காரர் முதல்வர் ஜெயலலிதாதான். அவரது சொத்து மதிப்பு ரூ. 113.73 கோடியாகும். ஆர்.கே.நகரிலிருந்து 2வது முறையாக தேர்வாகியுள்ளார் ஜெயலலிதா.

நம்பர் டூ கோடீஸ்வர அமைச்சர் வீரமணி

நம்பர் டூ கோடீஸ்வர அமைச்சர் வீரமணி

அமைச்சர் கே.சி. வீரமணி ரூ. 27 கோடி .சொத்துக்களுடன் 2வது பெரிய கோடீஸ்வர அமைச்சராக உள்ளார். ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் கே.சி. வீரமணி இருக்கிறார்.

3வது இடத்தில் ரெட்டி

3வது இடத்தில் ரெட்டி

3வது இடத்தில் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சரவை விரிவாக்கத்தின்போது கால்நடைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவருமான பாலகிருஷ்ண ரெட்டி இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ. 26 கோடியாகும்.

4வது இடத்தில் பெஞ்சமின்

4வது இடத்தில் பெஞ்சமின்

4வது இடம் மதுரவாயல் தொகுதி உறுப்பினரும், அமைச்சருமான பெஞ்சமினுடையது. அவர் ரூ. 23 கோடி அளவுக்கு சொத்து வைத்துள்ளார்.

பெரும் கோடீஸ்வரக் கட்சி திமுக

பெரும் கோடீஸ்வரக் கட்சி திமுக

அமைச்சர்கள் தவிர எம்.எல்.ஏக்களில் அதிக அளவிலான கோடீஸ்வரர்கள் இருப்பது திமுகவில்தான். திமுகவில்தான் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(இப்போதைக்கு) டாப் கோடீஸ்வரர் கருணாநிதி

(இப்போதைக்கு) டாப் கோடீஸ்வரர் கருணாநிதி

திமுக கோடீஸ்வரர்களிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரர் கட்சித் தலைவர் கருணாநிதிதான். அவரது சொத்து மதிப்பு ரூ. 62 கோடியாகும். திருவாரூர் தொகுதியிலிருந்து 2வது முறையாகவும், சட்டசபைக்கு 13வது முறையாகவும் கருணாநிதி தேர்வாகியுள்ளார். இருப்பினும் அரவக்குறிச்சியில் கே.சி. பழனிச்சாமி வென்று விட்டால் அவர் முதலிடத்திற்கு வந்து விடுவார்.

பிற திமுக கோடீஸ்வரர்கள்

பிற திமுக கோடீஸ்வரர்கள்

குறைந்தது ரூ. 10 கோடி அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் - பூங்கோதை ஆலடி அருணா (37 கோடி)., நந்தகுமார் (25), மு.க.மோகன் (170 கோடி), ஈஸ்வரப்பன் (12) கோடி, வரலட்சுமி மதுசூதன் (29), ஜே.அன்பழகன் (11), துரைமுருகன் (29), ராமர் (12), மு.க.ஸ்டாலின் (5), ஜி.அன்பழகன் (20), சுதர்சனம் (31), பழனிவேல் தியாகராஜன் (34), டிஆர்பி ராஜா (33), சக்கராபணி (10), தங்கப்பாண்டியன் (10), ஆர். காந்தி (36), அரவிந்த் ரமேஷ் (25), தாம்பரம் எஸ்ஆர் ராஜா (16), ரகுபதி (10), வி.ஜி.ராஜேந்திரன் (17), மு.க.ஸ்டாலின் (5), கு க செல்வம் (15), பொன்முடி (11), எ வ வேலு (17), கார்த்திகேயன் (15), ரங்கநாதன் (12).

அதிமுக கோடீஸ்வரர்கள்

அதிமுக கோடீஸ்வரர்கள்

அதிமுக - ஜெயலலிதா (113 கோடி), மாபா பாண்டியராஜன் (21 கோடி), கே.சி.கருப்பண்ணன் (13). ராமு (14), கே.சி.வீரமணி (27), பெஞ்சமின் (23), பொள்ளாச்சி ஜெயராமன் (20), மாணிக்கம் (17), சத்யநாராயணா (14)

படா கோடீஸ்வரர்.. காங்கிரஸின் எச். வசந்தகுமார்

படா கோடீஸ்வரர்.. காங்கிரஸின் எச். வசந்தகுமார்

இருப்பினும் தமிழக எம்.எல்.ஏக்களிலேயே மிகப் பெரிய மெகா கோடீஸ்வரர் வசந்த் டிவியின் உரிமையாளரும், வசந்த் அன் கோ நிறுவனரும், நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான எச். வசந்தகுமார்தான். இவரது சொத்து மதிப்பு ரூ. 337 கோடியாகும்.

"சில்லறை" எக்கச்சக்கம்

இதுதவிர ரூ. 1 கோடி முதல் 9 கோடி வரையிலான சொத்துக்களை வைத்திருப்போர் எக்கச்சக்கமாக உள்ளனர். மொத்தத்தில் தமிழக சட்டசபையில் அதிக அளவிலான கோடீஸ்வரர்கள் நடமாடப் போவது இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று தெரிகிறது.

English summary
The interesting statistic regarding the Tamil Nadu ministers is that 27 out of the 33 are crorepatis. Tamil Nadu Election Watch and Association for Democratic Reforms have analysed the self-sworn affidavits of 33 Ministers including the Chief Minister from Tamil Nadu State Assembly 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X