For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொங்கி வழியும் கும்பகரை அருவி... பொதுமக்கள் குஷி - வீடியோ

மேற்கு மலைத் தொடரில் தேனிக்கு அருகில் அமைந்துள்ள கும்பகரை நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டுவதால் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்து வருகின்றனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டத்திலுள்ள கும்பகரை அருவியில் நீர் கொட்டத் தொடங்கியுள்ளதால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அருவியில் நீராடி மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

தேனியிலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கும்பகரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்தால் நீர்வரத்து அதிகமாக இருக்கும். தேனி மாவட்ட மக்கள் மட்டுமில்லாது, தமிழகம், கேரளா என பல்வேறு மாநில சுற்றுலாபயணிகளும் கும்பகரை அருவியில் நீராடிச் செல்ல வருகை புரிவார்கள்.

In Theni Kumbakarai water falls, water flows and people enjoying it

தேனியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்த காரணத்தால் கும்பகரை அருவியில் தண்ணீர் அதிக அளவில் கொட்டியது. இதனால் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களும் சுற்றுலாபயணிகளும் அருவியில் குளிக்கத் தடை விதித்தனர்.

இந்நிலையில் அருவில் கொட்டும் நீரின் அளவு ஓரளவு குறைந்த காரணத்தால், தற்போது அருவியில் குளிக்க இருந்த தடையை வனத்துறை அதிகாரிகள் நீக்கியுள்ளனர். அதனால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அருவியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் கும்பகரை அருவியில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

English summary
In Theni Kumbakarai water falls, water flows. Local people and tourist enjoying in the Kumbakarai falls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X