For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துப்பாக்கி முனையில் வருமானவரித் துறையினர் சோதனை… தலைமைச் செயலாளருக்கே பாதுகாப்பில்லை.. ராம்மோகன் ராவ

வருமானவரிச் சோதனை நடத்தியது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என்று ராம்மோகன் ராவ் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகம், தலைமைச் செயலகத்தில் உள்ள அறைகள் வருமானவரித் துறையினரால் சோதனை நடத்தப்பட்டது. இது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என்று முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

முன்னாள் தலைமைச் செயலாளர் வீடு மற்றும் அலுவலகம், மகன் விவேக் வீடு என 13 இடங்களில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராம்மோகன் ராவ் வகித்து வந்த தலைமைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து நெஞ்சுவலி ஏற்பட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு வீட்டிற்கு வந்த ராம்மோகன் ராவ் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

Income tax raid at gun point: Rammohan Rao

முதலில் வருமானவரிச் சோதனைக்கு எதிராக குரல் கொடுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, எம்பி. பாலசுப்ரமணியன், தீரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வருமானவரி துறையினர் அதிகாலை 5.30 க்கு மணிக்கு என் வீட்டுக்கு வந்து துப்பாக்கி முனையில் மிரட்டி என் வீட்டை சோதனை செய்தனர். என் வீட்டில் மகள், மனைவி, நான் மட்டுமே இருந்தோம். வருமானவரித் துறையினர் காட்டிய வாரண்டில் என் பெயர் இல்லை.

தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய பின்னரே என்னை விசாரணை செய்திருக்க வேண்டும். நான் புரட்சித் தலைவி அம்மாவால் நியமிக்கப்பட்டவன். அவர் மறைந்த பிறகு தமிழ் நாட்டிற்கு பாதுகாப்பில்லை என்று கூறினார்.

English summary
“Income tax raid happened at gun point” said sacked chief secretary of TN Rammohan Rao to reporters today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X