For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"இந்தியாவின் மகள்" டாக்குமெண்டரியை ஒளிபரப்பிய பிபிசி... டிவிட்டரில் மக்கள் கொந்தளிப்பு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் தடையை மீறி நிர்பயா பற்றிய ஆவணப்படத்தை ஒளிபரப்பிய பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தை தடை செய்யவேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதுபற்றி இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை லெஸ்ஸி உட்வின் என்பவர் எடுத்துள்ளார். இதற்கு மத்திய அரசு தடைவிதித்தும் இன்று அதிகாலையில் பிபிசியில் ஒளிபரப்பாகிவிட்டது.

இதற்கு டிவிட்டரில் ‘பேன்பிபிசி' என்ற ஹேஸ்டேக் உருவாக்கி அதை டிரெண்ட் ஆக்கியுள்ளனர்.

ஹம்இந்துஸ்தானி

ஹம்இந்துஸ்தானி

ஹம்இந்துஸ்தானி என்பவர் வெளியிட்ட டிவிட்டில், எப்போதுமே பிபிசிக்கு இந்தியா என்றாலே காம்ப்ளக்ஸ் உண்டு. அதை இப்போது பயன்படுத்தியுள்ளது. பிபிசியை அம்பலப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

விபுல

விபுல

விபுல் என்பவர் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பிபிசியை தடை செய்யுங்கள் என்று கோரியுள்ளார்.

அனுபம் திரிவேதி

அனுபம் திரிவேதி தனது செய்தியில், பிபிசி டாக்குமெண்டரியில் எந்த ஆட்சேபகரமான விஷயமும் இல்லையே. எதற்கு தடை கோருகிறார்கள் என்று புரியவில்லை என்று கூறியுள்ளார்.

சராசரி இந்தியன்

சராசரி இந்தியன்

ஆர்டினரி இன்டியன் என்பவர், இந்தியாவில் பிபிசியை மோடி அரசு தடை செய்ய வேண்டும். இந்தியாவை 3வது உலக நாடாகவே பார்க்கிறது இங்கிலாந்து, அவர்களுக்கு, இந்தியாவில் யாருக்குமே நீதி கிடையாது என்று காட்ட இது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது என்று கூறியுள்ளார்.

யார் கூறுவார்கள்

யார் கூறுவார்கள்

பிபிசியை தடை செய்யக் கோருவோரில் எத்தனை பேர் மோடி அரசிலிருந்து நிஹல்சந்த்தை நீக்க வேண்டும் என்று இப்படி போர்க்கொடி உயர்த்துவார்கள் என்று சாகேப் என்பவர் கேட்டுள்ளார்.

சீரியஸ்லீ

சீரியஸ்லீ என்பவர் பிபிசி மட்டுமல்ல இங்கிலாந்தைச் சேர்ந்த அத்தனை மீடியா நிறுவனங்களையும் நாம் தடை செய்தால்தான் அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

என்டிடிவிக்கு தடை?

என்டிடிவிக்கு தடை?

திலீப் ஹஸாரிகா என்பவர் பிபிசியை தடை செய்யத் தேவையில்லை, என்டிடிவியைத்தான் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

சதித்திட்டம்

புரடஸ்டர் சிவம் என்பவர், இது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயின் சதித் திட்டம். இதை வைத்து ஐ.நாவில் அது பிரச்சினை கிளப்ப முயற்சிக்கும் என்று கறியுள்ளார்.

யு டுயூப்பில் படம்

கரண் லுகனி என்பவர், பிபிசியை தடை செய்யக் கோரி டிவிட்டரில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பிபிசியோ டாக்குமெண்டரியை யூடியூபில் போட்டு விட்டது என்று கூறியுள்ளது.

English summary
BanBBC is trending in India because BBC aired a documentary about rape in India. Nationalists never want to self-critique
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X