For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாங்க பேசலாம்... ட்விட்டரில் குவிந்த 100க்கணக்கான கேள்விகள்.. செலக்டிவாக பதிலளித்த விஜயகாந்த்!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வாங்க ட்விட்டரில் பேசலாம் என்று அழைத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்துவிட்டு பலரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டர் மூலம் மக்களுடன் உரையாட முடிவு செய்தார். இதையடுத்து வாங்க ட்விட்டரில் பேசலாம் என்று அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை ஒரு மணிநேரம் அவர் ட்விட்டரில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

சரியாக 10.30 மணிக்கு ட்விட்டருக்கு வந்த அவர் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் டான், டான் என பதில் அளிக்காமல் போனது அவர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.

புகைப்படம்

ட்விட்டரில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு விஜயகாந்த் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதில் அளித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பதில்கள்

10.30 மணியில் இருந்து பலர் விஜயகாந்திடம் ட்விட்டரில் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். ஆனால் அவரோ வெறும் 15 பேருக்கு தான் பதில் அளித்துள்ளார். அதில் 5 விஜயகாந்த் ட்விட்டரில் சேர்ந்ததற்கு வரவேற்று போட்ட ட்வீட்டுகளுக்கு நன்றி தெரிவித்தது.

இரண்டு பதில்

எத்தனையோ பேரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காத விஜயகாந்த் நிர்மல் குமார் என்பவருக்கு மட்டும் இரண்டு முறை பதில் அளித்துள்ளார். அவர் கேட்ட கேள்வியை விட்டுவிட்டு அவர் தன்னை பாராட்டியதற்கு மட்டும் பதில் அளித்துள்ளார்.

பதில் வரல

அஸ்வின் என்பவர் கேட்ட கேள்விக்கு விஜயகாந்த் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அஸ்வின் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, கேப்டன் நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை என தெரிவித்துள்ளார்.

உடல்நலம்

தங்கள் உடல் நலத்திற்கு ஏதும் குறைபாடா??
அப்படி ஏதுமிருந்தால் தெளிவு படுத்துங்கள். தங்களைப் பற்றிய கேலி குறையும்.

#Tweet2Vijayakant. இந்த கேள்விக்கு விஜயகாந்த் பதில் அளிக்கவில்லை.

ரசிகர்கள்

உங்களிடம் இருக்கும் ரசிகர்களை வைத்து ஆட்சியில் இல்லாமலேயே மக்களுக்கு உதவி செய்யலாமே கேப்டன்?#Tweet2Vijayakant

ஷரிப்

#Tweet2Vijayakant உங்கள் குரலுக்கு எப்பொழுது சிகிச்சை பெறப் போகிறீர்கள்? உங்களின் கம்பீர குரலை மிஸ் பண்ணுகிறோம். டேக் கேர் கேப்டன் என ஷரிப் தெரிவித்துள்ளார்.

ட்வீட்

தலைவர உண்மையை நீங்க தான் twitt பண்ணிறிங்களா இல்லை வேற யாரும் பண்னுறாங்காளா #Tweet2Vijayakant

தெளிவு

@iVijayakant #Tweet2Vijayakant

முன்னிருந்த தெளிவு ஏன் இப்பொழுது உங்கள் பேச்சில் இல்லை.

பழைய ரமனாவா எப்போ மாறுவிங்க :-))

விஜயகாந்த்

10.30 முதல் 11.30 மணி என்று கூறிய விஜயகாந்த் மக்களுக்கு நன்றி தெரிவித்து தனது செஷனை முடித்துக் கொண்டுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதில் 10 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்துள்ளார்.

சந்தோஷம்

எதிர்காலம் இளைஞர்கள் கையில், வலைத்தளங்கள் வாயிலாக உங்களுடன் உரையாடியதில் சந்தோஷம் என விஜயகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
DMDK chief Vijayakanth's first twitter interaction with people should be appreciated but it is a failure as he chose not to answer most of the questions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X