For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்களுக்குப் பிடிக்குதோ, இல்லையோ இனி "சின்னம்மா"தான்.... தமிழகத்திற்கு இதை விட வேற என்ன வேணும்!?

அம்மாவே சரணம் என்று இருந்த அதிமுக நிர்வாகிகள் இப்போது சின்னம்மாதான் இனி எல்லாம் என்று பேசத்தொடங்கி விட்டனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சின்ன அம்மா என்ற வார்த்தை கடந்த இரு தினங்களாக அதிமுக நிர்வாகிகள், சில ஊடகங்களில் உச்சரிக்கப்படும் வார்த்தையாக உள்ளது. அம்மாவை ஏற்றுக்கொள்ளும் தமிழர்கள் சித்தியையோ சின்ன அம்மாவையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது பலருக்கும் தெரியும்.

ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் கார்டனில் இருந்து வரும் வழியில் பின்னி சாலையில் அதிமுக தலைமை அலுவலகத்தின் வாசலில் 'சின்ன அம்மா' என்று வழி நெடுக போஸ்டர்கள் முளைக்க ஆரம்பித்துவிட்டது.

It is going to be Chinnamma everywhere, if you like or not

முறை வைத்து கூப்பிடும் மக்கள்

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்கள். நம் நாட்டில் காந்தியை தாத்தா என்றோம், நேருவை மாமா என்று அழைத்தோம். சோனியாவை அன்னை என்று காங்கிரஸ் கட்சியினர் அழைக்க, அதிமுகவினரோ தங்களின் தலைவியை அம்மா என்று அழைத்து வணங்கி வருகின்றனர். இதை பார்த்துதான் பாஜகவினர் இனி அண்ணா என்றும், அக்கா என்றும் அழைக்க வேண்டும் என்று உத்தரவே போட்டனர்.

மாறிப் போன காட்சி

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளன. கட்சிக்கு வழி நடத்துங்கள் சின்ன அம்மாவே என்று அழைப்பு விடுத்து வருகின்றனர். இனி எல்லாமே சின்ன அம்மாதான் என்பது போல பதிய வைக்கத் தொடங்கி விட்டனர்.

அந்தர் பல்டியா இருக்கே?

அரசியலில் பல்டி சகஜம்தான் ஆனால் இப்படி அந்தர் பல்டியடிப்பார்கள் என்று எந்த ஒரு உண்மையான தொண்டனும் நினைத்திருக்க மாட்டார்கள். நேற்று வரை அம்மா அம்மா என்று உச்சரித்த நாக்குகள் எல்லாம் சின்ன அம்மா புகழ் பாட ஆரம்பித்து விட்டன.

தமிழகத்தின் தலையெழுத்து

'பின்னி' என்றால் தெலுங்கில் 'சித்தி' 'சின்ன அம்மா' என்பது பொருள். அதிமுக போஸ்டர்களில் ஜெயலலிதா இருந்தவரை ஓரத்தில் சிரிக்கும் எம்.ஜி.ஆர். படம் போல ஜெயலலிதாவும் ஒரு ஓரத்தில் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழகத்தின் தலையெழுத்தும் அதிமுக தொண்டர்களின் தலையெழுத்தும் இதுதான் என்றாகிவிட்டது.

நான் இல்லாவிட்டாலும் அதிமுக இருக்கும்

இப்படி எல்லாம் நடக்கும் என்று உணர்ந்துதான் என்னவோ ஜெயலலிதா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக 200 ஆண்டுகள் இருக்கும் என்று கூறினார். ஆனால் ஓவராக ஒலிக்கும் சின்ன அம்மா கோஷம் கட்சியை வழி நடத்துமா என்பது சந்தேகமே.

English summary
ADMK front line leaders have decided to make Sasikala as their next leader withing few days of Jayalalitha's demise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X