தமிழகம், புதுச்சேரியில் காளீஸ்வரி நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில் ஐடி ரெய்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: காளீஸ்வரி எண்ணை நிறுவனத்தில் வருமான வரி சோதனைகள் நடைபெற்று வருகிறது.

சென்னை, புதுச்சேரி, மதுரை உட்பட காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான 54 இடங்களில், 250க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் ஒரே நேரத்தில் காலை முதல் வருமான வரி சோதனை நடத்தி வருகிறார்கள்.

IT raids at Kaleeswari oil firm

சென்னை மயிலாப்பூரில் உள்ள உரிமையாளர் வீடு மற்றும் மதுரை, விருதுநகர், உள்ளிட்ட 54 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக முறையான வருமானவரி தாக்கல் செய்யாததால் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சோதனையில் நூற்றிற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

காளீஸ்வரி நிறுவனம், சமையல் எண்ணை மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடித்த ஒரு நிறுவனம்.

தமிழகத்தில் சமீப காலங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் என பல தரப்பு மட்டத்திலும் ஐடி ரெய்டுகள் நடைபெறுகின்றன. நேற்று ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
IT raids at Kaleeswari oil firm places across Tamilnadu and Puducherry.
Please Wait while comments are loading...