For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ2 கோடி அபாரதம் கட்டியதால் ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இருவரும் ரூ2 கோடி அபாரதம் செலுத்தியதால் 18 ஆண்டுகாலம் நடைபெற்று வந்த வழக்கை வாபஸ் பெறுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 1991 - 92 ; 1992 - 93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதன் பங்குதாரர்களான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

IT withdraws case against Jaya, Sasikala

இதற்கு எதிராக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது குற்றம் என்று கூறி இந்த வழக்கை விரைந்து நடத்தி தீர்ப்பு வழங்க உத்தரவிட்டது.

இவ்வழக்கை எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர குற்றவியல் கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் (பொருளாதாரக் குற்ற வழக்குகள்) நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி விசாரணை நடத்தி வந்தார்.

இதனிடையே கடந்த மாதம் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாததற்கான அபராதத் தொகையை செலுத்தத் தயாராக இருப்பதாக வருமான வரித்துறையிடம் ஜெயலலிதா, சசிகலா தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை அபராதத்துடன் வரி செலுத்த ஜெயலலிதா, சசிகலாவுக்கு அனுமதி அளித்தது.

இதனடிப்படையில் ரூ 2 கோடி அபாரதம் செலுத்தப்பட்டதாக ஜெயலலிதா, சசிகலா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை இன்று நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற போது, ஜெயலலிதாவும் சசிகலாவும் ரூ2 கோடி அபராதம் செலுத்திவிட்டதால் வழக்கைத் திரும்பப் பெறுவதாக வருமான வரித்துறை வழக்கறிஞர் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.

இம்மனு மீது மாலை 3 மணிக்கு தீர்ப்பளிப்பதாக நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். சுமார் 18 ஆண்டுகாலம் நடைபெற்று வந்த இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Income Tax department withdraws 18-year-old income tax returns case against ADMK leader Jayalalaithaa and her friend N Sasikalaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X